கரூர் பார்லிமென்ட் தொகுதிக்கு உட்பட்ட மதியநல்லுார், பணம்பட்டி ஆகிய பகுதிகளில், அந்த தொகுதியின் காங்கிரஸ், எம்.பி., ஜோதிமணி, பொதுமக்களை சந்தித்து குறைகள் கேட்டறிந்தார். நிருபர்களிடம், அவர் கூறுகையில், 'அரசியல் கட்சியினர், தரம் தாழ்ந்த விமர்சனங்களை வைக்கக் கூடாது. கடந்த, 2014 லோக்சபா தேர்தல்களில், தரம் தாழ்ந்த விமர்சனங்கள் தான் முன் வைக்கப்படுகின்றன' என்றார்.அங்கிருந்த இளம் நிருபர், 'இந்திராவின் நெற்றியில் வழிந்த ரத்தத்திற்கும், திராவிட நாடு எங்கே இருக்கிறது எனக் கேட்ட, அனந்தநாயகிக்கும், தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி சொன்ன விமர்சனம் எல்லாம், காங்கிரசுக்கு ரொம்ப பிடிக்கும் போல...' என்றார்.சுற்றியிருந்தோர், தலையில் அடித்துக் கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE