பேச்சு, பேட்டி, அறிக்கை| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : டிச 14, 2020
Share
வர வர நீங்கள் நியாயமாக பேசி வருகிறீர்கள்; அறிக்கை தயாரித்த பழைய உதவியாளர்களை மாற்றி விட்டீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அறிக்கை: அச்சு ஊடகங்கள் பொது முடக்கத்தால் கடும் பாதிப்பிற்குள்ளாகின. சலுகைத் திட்டங்களை அறிவிக்கும்படி இந்திய பத்திரிகைகள் சங்கம் தொடர்ச்சியாக அரசின் கதவுகளைத் தட்டிக்கொண்டே
 பேச்சு, பேட்டி, அறிக்கை

வர வர நீங்கள் நியாயமாக பேசி வருகிறீர்கள்; அறிக்கை தயாரித்த பழைய உதவியாளர்களை மாற்றி விட்டீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அறிக்கை: அச்சு ஊடகங்கள் பொது முடக்கத்தால் கடும் பாதிப்பிற்குள்ளாகின. சலுகைத் திட்டங்களை அறிவிக்கும்படி இந்திய பத்திரிகைகள் சங்கம் தொடர்ச்சியாக அரசின் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கிறது. மத்திய அரசின் பாராமுகம் ஏற்புடையதல்ல. ஜனநாயகத்தின் நான்காவது துாண் காக்கப்பட வேண்டும்.

'தி.மு.க.,விலுமா யாரும் ஆசைப்படவில்லை...' என, ஆச்சர்யமாக கேட்கத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன்: முதல்வராக வேண்டும் என, எதிர்க்கட்சிதலைவர் ஸ்டாலின் மட்டும் தான் விரும்புகிறார். ஆனால், அவரைத் தவிர, வேறு யாரும் அவர் முதல்வராக ஆசைப்படவில்லை என்பது, ஸ்டாலினுக்கு இன்னும் தெரியவில்லை.

'நீங்கள் சொல்வது போலத் தான் அனைவரும் பேசிக் கொள்கின்றனர்; அ.தி.மு.க., வெற்றி பெற்று விடுமா...' என, எதிர்கேள்வி கேட்கத் தோன்றும் வகையில், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பாஸ்கரன் பேச்சு: இந்த முறை வெற்றி பெற்றுவிட்டால், தி.மு.க., மட்டுமல்ல வேறு எந்த சக்தியாலும், அ.தி.மு.க.,வை அசைக்கவே முடியாது. வரும் தேர்தலில், அ.தி.மு.க., வினர் கடுமையாகவும், ஒற்றுமையாகவும் உழைத்து, அதிக ஓட்டுகளை பெற்று மீண்டும், அ.தி.மு.க.,வை ஆட்சியில் அமர செய்ய வேண்டும்.
'காலம் காலமாக இப்படித் தான் நடந்துள்ளது என்பதை கம்யூ.,க்கள் நினைவுபடுத்துகிறீர்களோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் பேட்டி: இயற்கை பேரிடர் காலங்களில் வரும் மத்திய குழு, சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிட்டு செல்லும். ஆனால், நிதி கிடைக்கப் பெறாமல் மர்மமாக இருக்கும். அதுபோல, இப்போது இருக்கக் கூடாது. தமிழக அரசு கேட்கும் நிதியை, இயற்கை பேரிடர் நிதியிலிருந்து முழுமையாக மத்திய அரசு வழங்க வேண்டும்.

'இப்படி எல்லாம் கூட, 'ஜால்ரா' அடிக்க முடியுமா...' என, ஆச்சர்யம் ஏற்படுத்தும் வகையில், ஒன்றிரண்டு படங்களை இயக்கியுள்ள சினிமா இயக்குனர் பிரவீன் காந்தி பேச்சு: எப்படி ஒவ்வொரு வீட்டுக்கும் கதவு தேவையோ, அப்படி ஒவ்வொரு வீட்டுக்கும் ரஜினி தேவை; அவரை இனி, எல்லாரும், 'ரஜினியார்' என்றே அழைக்க வேண்டும்.

'கம்யூ.,க்கள் கூட்டங்களில் ஏன், இறை வணக்கம் பாடுவதில்லை என்ற கேள்விக்கு நீங்கள் பதில் சொன்னால், உங்கள் கேள்விக்கு, மத்திய அரசு பதில் சொல்லும்...' என, நெத்தியடியாக கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேராசிரியர் அருணன் அறிக்கை: மதச்சார்பற்ற குடியரசு என்றால், அனைத்து மதங்ளையும் சமமாக பாவிப்பது. பார்லிமென்ட் வளாக கட்டட அடிக்கல் நாட்டு விழாவில், ஹிந்து மத சடங்குகள் மட்டுமே நடந்தன. சடங்கு மட்டும் ஒரு மதத்தவரது. வரி மட்டும் அனைவரும் கொடுப்பதா?'

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X