பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: தவறுக்கு தண்டனை கொடுங்கள்!

Updated : டிச 15, 2020 | Added : டிச 14, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் : பா.விஜய், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:'ஐப்பசி, கார்த்திகை அடை மழைக் காலம்' என்பது, அனைவருக்கும் தெரியும். எவ்வளவு மழை பெய்தாலும், கோடையில் தண்ணீர் பிரச்னை முளைப்பது, நம் அரசின் அலட்சியத்தை எடுத்துரைக்கிறது.பொதுப்பணித் துறையின்
ithu ungal idam, இது உங்கள் இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :பா.விஜய், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:
'ஐப்பசி, கார்த்திகை அடை மழைக் காலம்' என்பது, அனைவருக்கும் தெரியும். எவ்வளவு மழை பெய்தாலும், கோடையில் தண்ணீர் பிரச்னை முளைப்பது, நம் அரசின் அலட்சியத்தை எடுத்துரைக்கிறது.

பொதுப்பணித் துறையின் மெத்தனம் காரணமாகவே, மழைக் காலங்களில் கடலுாரும், டெல்டா மாவட்டங்களும் நீரில் மிதக்கின்றன. பல லட்சம் விவசாயக் குடும்பங்கள், நிர்க்கதியாகி நிற்கின்றன.'நீரின்றி அமையாது உலகு' என்ற, திருவள்ளூவரின் வாக்கு என்றும் சிறப்புடையது. மழை நீர், இயற்கையின் கொடை என்பதை, நாம் மறக்கக் கூடாது. ஓரறிவு உயிரினத்திலிருந்து, ஆறறிவு படைத்த மனிதர் வரை, அனைத்திற்கும் உயிர் வாழ, தண்ணீர் அவசியம்.மழை நீரை முறையாகச் சேமிக்கத் தவறுவதால் தான், அனைத்துப் பிரச்னைகளும் தலையெடுக்கின்றன.


latest tamil news


நீராதாரங்களை முறையாகச் செப்பனிட்டுப் பராமரிக்கும் மகத்தான பணியைப் பிரதானமாகக் கொண்டதே, பொதுப்பணித் துறை. ஆனால், அத்துறையில் நடப்பது என்ன? ஊழல் அதிகமாக நடக்கும் துறைகளில் இதுவும் ஒன்று.நீர்நிலையை ஆழப்படுத்தாமலும், பராமரிக்காமலும் இருப்பதால், மழைக் காலங்களில், குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்து, மக்களை பாதிக்கிறது. வான் அளித்த கொடையான மழைநீர், வீணாக சென்று கடலில் கலக்கிறது.

'கன மழை காலங்களில், பாதிக்கப்பட்ட பல ஆயிரம் பேருக்கு, தங்க இடம் அளித்தோம்; உணவு அளித்தோம்' என, அரசு பெருமையாக கூறுகிறது. அதில் என்ன பெருமை?நீர்நிலையை முறையாக பராமரிக்க தவறியதால், இந்த அவலம் அரங்கேறுகிறது. அதற்காக அரசு, வெட்கப்பட வேண்டும். மழைக் காலத்தில் ஏற்படும் பாதிப்பிற்கு முழுப் பொறுப்பையும், பொதுப்பணித் துறை ஏற்க வேண்டும்.மழைநீர், குடியிருப்பை சூழ்ந்தாலும், கடலில் சென்று கலந்தாலும், சம்பந்தப்பட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SaiBaba - Chennai,இந்தியா
14-டிச-202020:00:19 IST Report Abuse
SaiBaba மனிதனின் அடிப்படைத்தேவை காற்று, நீர், உணவு, கல்வி, மருத்துவம் . இந்தியாவின் மூலதனம் சொத்து இதெல்லாம் மக்கள் தொகை மட்டும் தான். எனவே அதிகார வர்க்கம் இதுல எல்லாம் தான் காசு பார்க்க முடியும். 130 மனிதத்தொகைன்னா அதுல நமக்கு எவ்வளவு தேறும்.
Rate this:
Cancel
14-டிச-202018:41:19 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K ஏரிகள் தூர் வாரப்படுவதில்லை. அழப்படுத்துவதில்லை. ஆக்கிரமிப்புக்கு ஆளாகிறது. நடவடிக்கை எடுப்பதில்லை. அப்படியே எடுத்தாலும் காலதாமதமாக செய்கிறார்கள். அவ்வப்பொழுது கண்காணிப்பு என்கிற விதியை பின்பற்றுவதில்லை. மழை நீர் வீனடிக்கப்படுகிறது. இப்படியே பட்டியல் நீளுகிறது. தயவு செய்து பொதுப்பணித்துறை அதிகாரிகளும், அரசும் இந்த மாதிரியான குறைகளை களையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Rate this:
Cancel
Kannan - chennai,இந்தியா
14-டிச-202014:58:22 IST Report Abuse
Kannan பா.விஜய் சொல்வது உண்மைதான்...கரெக்ட் ... அதை நான் வரவேற்கிறேன்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X