புதுடில்லி: டில்லியில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாய சங்க பிரதிநிதி, வி.எம்.சிங்கின் உண்மையான முகம் அம்பலமாகி உள்ளது.

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லி எல்லைப் பகுதியில், விவசாயிகள் நடத்தும் போராட்டங்கள் தீவிரம் அடைந்து உள்ளன.இந்த போராட்டத்தில், ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அம்பானி, அதானி போன்ற தொழிலதிபர்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வரும், 'அனைத்து இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு கமிட்டி' என்ற விவசாய சங்கத்தின் தலைவரான, வி.எம். சிங்கின், உண்மையான முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்த சிங்கிற்கு, 631 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளது தெரியவந்துள்ளது.

2009ல், தேர்தலுக்காக இவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் வாயிலாக, இந்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன.இதுமட்டுமல்லாமல், சட்ட அமலாக்கத்துறை முகமைகள், இவர் மீது வழக்குகளும் பதிவு செய்து இருப்பது தெரியவந்துள்ளது. 2009ம் ஆண்டின் படி, சிங் மீது, வன்முறைகளில் ஈடுபட்டது உட்பட, எட்டு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இவற்றை எல்லாம் மறைத்துவிட்டு, சாதாரண விவசாயி போல், ஊடகங்களில் தன்னை காட்டிக்கொள்ளும் சிங்கின், உண்மையான முகம் அம்பலமாகி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE