சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

உட்கட்சி பூசலால் கட்டுக்கோப்பு கலையும் தி.மு.க.,

Added : டிச 14, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
டீ கடை பெஞ்ச்உட்கட்சி பூசலால் கட்டுக்கோப்பு கலையும் தி.மு.க.,''இன்ஸ்பெக்டர் பெயர்ல வசூல் வேட்டையில ஈடுபடுறாருங்க...'' என்றபடியே, பெஞ்சுக்கு வந்தார், அந்தோணிசாமி.''எந்த ஊர் விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''திருச்சி, வையம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டரா இருக்கிற சண்முகசுந்தரம், நேர்மையானவர்னு பெயர் எடுத்தவர்... ஆனா, இவர் பெயரைச் சொல்லி, வக்கீல் ஒருத்தர்,
 உட்கட்சி பூசலால் கட்டுக்கோப்பு கலையும் தி.மு.க.,


டீ கடை பெஞ்ச்

உட்கட்சி பூசலால் கட்டுக்கோப்பு கலையும் தி.மு.க.,

''இன்ஸ்பெக்டர் பெயர்ல வசூல் வேட்டையில ஈடுபடுறாருங்க...'' என்றபடியே, பெஞ்சுக்கு வந்தார், அந்தோணிசாமி.
''எந்த ஊர் விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''திருச்சி, வையம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டரா இருக்கிற சண்முகசுந்தரம், நேர்மையானவர்னு பெயர் எடுத்தவர்... ஆனா, இவர் பெயரைச் சொல்லி, வக்கீல் ஒருத்தர், 'கல்லா' கட்டிட்டு இருக்காருங்க...
''தினசரி கோர்ட்டுக்கு போறாரோ இல்லையோ, ஸ்டேஷன்ல ஆஜராகிடுறார்... புகார் தர வர்றவங்களிடம் பேரம் பேசி, பணம் வசூலிக்காருங்க... இது போக, மணல் கடத்தல் கும்பல், லாட்டரி வியாபாரிகள், போலி மது விற்பனை செய்ற
வங்களிடம், வார, மாத மாமூல் வசூலிக்காருங்க...
''சமீபத்துல ஒரு மணல் கடத்தல் கும்பலிடம், 50 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு, அடிதடியாகிடுச்சுங்க... இதுல, வக்கீலின் கார்
கண்ணாடி உடைஞ்சிடுச்சு... இதெல்லாம், இன்ஸ்பெக்டருக்கு தெரியுமா, தெரியாதான்னு, நியாயமான போலீசார் கேட்கிறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''துளசி சேகரன் வந்தா, எனக்கு போன் பண்ணச் சொல்லுங்கோ...'' என, மொபைல் போனை, 'ஆப்' செய்தபடியே வந்த குப்பண்ணா, ''பதவி உயர்வு பட்டியல் கிடப்புல போயிடுமோன்னு பயப்படறா ஓய்...'' என, விஷயத்திற்கு வந்தார்.
''எந்தத் துறையில வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''பத்திரப்பதிவுத் துறையில, உதவியாளர்கள், பணி மூப்பு அடிப்படையில, இரண்டாம் நிலை சார் - பதிவாளர்களா நியமிக்கப்படுவா... இந்த பதவி உயர்வுக்காக, நீண்ட இழுபறிக்கு அப்பறமா, 157 உதவியாளர்கள் பட்டியலை, இட ஒதுக்கீடு
அடிப்படையில, பதிவுத்துறை அதிகாரிகள் தயார் பண்ணிண்டா ஓய்...
''ஆனா, இந்தப் பட்டியல் தயாரிப்புல, பெண்களுக்கான இடஒதுக்கீடு விதிமுறைகள் சரியா பின்பற்றப்படலைன்னு புகார் எழுந்திருக்கு ஓய்...
''இதனால, அதிருப்தியில இருக்கற பெண் உதவியாளர்கள், கோர்ட்டுக்கு போலாமான்னு யோஜனை பண்ணிண்டு இருக்கா... இதனால, பதவி உயர்வு பட்டியல் மறுபடியும் கிடப்புல போயிடுமோன்னு, உதவியாளர்கள் பயப்படறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''தேர்தல் நெருங்க, நெருங்க, உள்கட்சிப் பூசலும் அதிகமாயிட்டே போவுதுல்லா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.
''காங்கிரஸ் கட்சியிலா பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''இல்லை... அவங்க கூட கூட்டணி அமைச்சிருக்கிற தி.மு.க.,வுல தான் சொல்லுதேன்... திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய தி.மு.க., செயலரா நியமிக்கப்பட்டுள்ள உமா என்பவரை மாற்றி, மோகன்ராஜ் என்பவரை நியமிக்க வலியுறுத்தி, 12 ஊராட்சிகளைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர் போர்க்கொடி துாக்கியிருக்காவ வே...
''உமாவை மாத்தலைன்னா, அறிவாலயம் முன் தொடர் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருக்காவளாம்... அதே மாதிரி, ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலரா நியமிக்கப்பட்டிருக்கிற, சதீஷுக்கும் எதிர்ப்பு வந்துட்டு...
''அவரை மாத்திட்டு, ஏற்கனவே அந்தப் பதவியில இருந்த காசியை நியமிக்கணும்னு, கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பியிருக்காவ வே...'' என்றார்
அண்ணாச்சி.
''ம்... கருணாநிதி இருக்கறச்சே, கட்சியை எப்படி கட்டுக் கோப்பா வச்சிருந்தார்...'' என, அங்கலாய்த்தபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
15-டிச-202018:27:50 IST Report Abuse
Anantharaman Srinivasan அடாவடி வசூல்செய்யும் துளசி சேகரன் ஆளும்கட்சி வக்கீலா? ?
Rate this:
Cancel
ramesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-டிச-202011:28:47 IST Report Abuse
ramesh நீங்க என்ன தான் தி மு க வை வசை பாடினாலும் உங்க பாச்ச பலிக்காது
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
15-டிச-202005:59:29 IST Report Abuse
D.Ambujavalli ‘சின்னப்பிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது’ என்பார்கள் அப்பாவிடம் அவரது அரசியல் அணுகுமுறை, தொண்டர்கள், கீழுள்ள நிர்வாகிகளை அரவணைத்தல் எதையும் கற்றுக்கொள்ளவில்லை போதாக்குறைக்கு ‘வீட்டு’ கன்சல்டன்சி யால் பிள்ளையை அரங்கில் விட்டு, அதகளம், இத்தனைக்குப் பிறகு, கட்சியை பலவீனப்படுத்த வெளி விரோதிகளே வேண்டாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X