டிச., 15, 1908
கேரள மாநிலம், திருச்சூரில், 1908 டிச., 15ம் தேதி பிறந்தவர், சுவாமி ரங்கநாதானந்தர். இயற்பெயர் சங்கரன். 1926ல், பிரம்மச்சாரியாக, மைசூர் கிளை ராமகிருஷ்ண இயக்கத்தில் இணைந்தார். கராச்சி ராமகிருஷ்ண மடத்தில் தலைவராகப் பணியாற்றியவர், பாக்., பிரிவினைக்குப் பின், இந்தியா திரும்பினார்.முகமது அலி ஜின்னா முதல் மன்மோகன் சிங் வரை பலரும், சுவாமி ரங்கநாதானந்தரின் சொற்பொழிவால் ஈர்க்கப்பட்டனர். ராமகிருஷ்ண மடத்தின், 13வது தலைவராகப் பொறுப்பேற்றார்.நாட்டு ஒற்றுமைக்கான, 'இந்திரா' விருது மற்றும் 'காந்தி அமைதிப் பரிசு' ஆகியவற்றை, ராமகிருஷ்ண இயக்கத்திற்காகப் பெற்றுக் கொண்டவர், மத்திய அரசு, 'பத்ம விபூஷண்' விருது வழங்க முயன்றபோது, தனிமனிதரை அடையாளப்படுத்துவதாகக் கூறி, அதை பெற்றுக் கொள்ள மறுத்தார்.கோல்கட்டா அருகில் உள்ள பேலுார் மடத்தில், 2005 ஏப்., 25ம் தேதி, தன், 96வது வயதில் காலமானார்.சுவாமி ரங்கநாதானந்தர் பிறந்த தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE