அரசியல் செய்தி

தமிழ்நாடு

நேர்மைக்கான அடையாளம் என் வாழ்க்கை: கமல் பெருமிதம்

Updated : டிச 16, 2020 | Added : டிச 14, 2020 | கருத்துகள் (64+ 48)
Share
Advertisement
மதுரை : ''என் வாழ்க்கை தான், என் நேர்மைக்கான அடையாளம். அதை, நீங்கள் எப்படி சலித்து பார்த்தாலும், சல்லடை போட்டு தேடினாலும், எஞ்சுவது நேர்மை மட்டுமே,'' என, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார்.தென் மாவட்டங்களில், தேர்தல் பிரசாரம் துவங்கியுள்ள, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன், நேற்று மதுரையில், கட்சி சார்பில் நடந்த வழக்கறிஞர்கள் கூட்டத்தில்
 நேர்மை,அடையாளம், , வாழ்க்கை, கமல், பெருமிதம்

மதுரை : ''என் வாழ்க்கை தான், என் நேர்மைக்கான அடையாளம். அதை, நீங்கள் எப்படி சலித்து பார்த்தாலும், சல்லடை போட்டு தேடினாலும், எஞ்சுவது நேர்மை மட்டுமே,'' என, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

தென் மாவட்டங்களில், தேர்தல் பிரசாரம் துவங்கியுள்ள, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன், நேற்று மதுரையில், கட்சி சார்பில் நடந்த வழக்கறிஞர்கள் கூட்டத்தில் பேசியதாவது:நான் ஒரு வழக்கறிஞர் மகன். இன்றும் ஒரு டஜன் வழக்கறிஞர்கள், எங்கள் குடும்பத்தில் உள்ளனர். வழக்கறிஞர்கள் அருகாமை எனக்கு புதிதல்ல. அதனால் தான் என்னவோ, இந்த கட்சியை துவக்க வேண்டும் என வந்தபோதும், நற்பணி மன்றாக இருந்த போதும், வழக்கறிஞர்கள் இருந்தே ஆக வேண்டும் என்றேன்.


தேர்தல் அறிக்கை


நற்பணி செய்ய, தமிழகத்தில் நிறைய தடைகள் உண்டு. 40 ஆண்டுகளாக நற்பணி செய்ய, நாங்கள் எதிர்கொண்டது கட்சிக்காரர்களை தான். ஒன்று, எங்களை செய்ய விடமாட்டார்கள். அல்லது செய்த பின், எங்கள் நெற்றியில், அவர்கள் லேபிளை ஒட்டி விடுவர்.என் வாழ்க்கை தான், என் நேர்மைக்கான அடையாளம். அதை நீங்கள் எப்படி சலித்து பார்த்தாலும், சல்லடை போட்டு தேடினாலும், எஞ்சுவது நேர்மை மட்டுமே. காந்தி சொல்வதை போல, நான் சொல்கிறேன் என கருத வேண்டாம். இப்படியும் அரசியல் செய்யலாம் என்பதற்கு எடுத்துகாட்டாக, ம.நீ.மை., கட்சியினர் இருப்பர். வழக்கறிஞர்கள் கோரிக்கைகளை உன்னிப்பாக கவனிப்போம். தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்வோம்.இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, தொழில் முனைவோர் கூட்டத்தில் கமல் பேசியதாவது:கமிஷன் ராஜ்யமாக மாறிய தமிழகத்தை, மிஷன் ராஜ்யமாக மாற்ற வேண்டும் என்பது என் ஆசை. நமக்கு எதற்கு இந்த அரசியல் என விட்டதால் தான், அரை நுாற்றாண்டாக, கமிஷன் ராஜ்யம் அமைத்து விட்டனர்.அதை மாற்றாவிடில் வரும் தலைமுறையினருக்கு அவமானம். உங்கள் தொழிலை விட்டு வர வேண்டியதில்லை. அது இன்னும் சிறப்பாக நடக்க வேண்டும் என்பது தான் ஆசை. ஒற்றைச் சாரள முறை - சிங்கள் விண்டோ சிஸ்டம் - என ஒரு ஓட்டையாவது போட்டுள்ளனரா என, ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தோஷ்பாபுவிடம் கேட்டேன். அந்த ஓட்டைக்கு பின்னால் நிறைய விண்டோஸ் வைத்து விட்டனர் என்றார் அவர். விண்டோஸ் என்பது பேச்சாகவே இருக்கிறது. நாங்கள் செய்வோம் என்ற உறுதியுடன் வந்துள்ளோம்.


மக்கும் குப்பை


தொழில் செய்வதற்கான புறச்சூழல், இங்கு புதர் மண்டியுள்ளது. அந்த புதரை வெட்டி அகற்றும் ஏர்முனையின் நுனி முள்ளாக நான் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். பெரிய தொழில்கள், சிறு, குறுதொழில்கள் வர வேண்டும். 50 பெரிய நிறுவனங்கள் இருந்தது என்றால், 5 லட்சம் சிறு குறு தொழில் முனைவோர் இருந்தால் தான் நாட்டின் சுபிட்சம் இன்னும் அதிகமாகும்.தமிழகம் முழுதும் குப்பை கொட்டி கிடக்கிறது. இதை எங்கு கொட்டுவது என தெரியவில்லை. அமெரிக்காவில் உள்ள நண்பர் ஸ்ரீதரிடம் பேசினேன். புளும்டெக்னாலஜி குறித்து படிக்க முடிந்தது. நம்முடைய மக்கும் குப்பையை, மூலதனமாக வைத்து செயல்படாமல், நோய் பரப்பும் இடமாக வைத்துள்ளோம். குப்பையில் இருந்து மின்சாரத்தை தர முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, அவர் தேனி புறப்பட்டு சென்றார்.


தேர்தலில் போட்டிமதுரையில் நேற்று கமல் அளித்த பேட்டி:மற்ற கட்சிகளில் நேர்மை இல்லாததால் தான், அரசியலுக்கு வந்தேன். அந்த கட்சிகளில், குறைந்த எண்ணிக்கையில் நேர்மையானவர்கள்
உள்ளனர். மக்கள் ஆதரவு எங்களுக்கு அதிகரிக்கிறது என்பதால், பிரசாரத்திற்கு தடை விதித்திருக்கலாம்.நானும் ரஜினியும் இணைந்தால், வெற்றி படைக்கலாம் என நான் கூறி பல நாட்களாகி விட்டது. அதற்கான நேரம் வர வேண்டும். டிச., 31 வரை பொறுத்திருந்து, பதில் சொல்வது சரியாக இருக்கும். சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.


அமைச்சரவையில் 20 பெண்கள்சமூக வலைதளத்திலும் அவ்வப்போது மனம் போன போக்கில், கமல் சில கருத்துகளை வெளியிடுவார். அவரது நேற்றைய, 'டுவிட்டர்' பதிவு:'இரண்டரை ஆண்டுகள் ஆண்களும்; இரண்டரை ஆண்டுகள் பெண்களும் ஆள வேண்டும்' என, திடீர் பெண்ணுரிமை பற்றி பேசுபவரின் கட்சியில், ஒரு மாவட்ட செயலர் கூட பெண் இல்லை. மக்கள் நீதி மையம் ஆட்சியில் குறைந்தது, 20 பெண் அமைச்சர்கள் இருப்பர். யார் ரிலீசையும் மனதில் வைத்து, இதை நான் சொல்லவில்லை.
இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (64+ 48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
18-டிச-202020:48:03 IST Report Abuse
Swaminathan Chandramouli கமலஹாசன் தற்போதைய தமிழக அரசாங்கம் கமிஷன் ராஜ்யமாக உள்ளது அவர் பதவிக்கு வந்தால் தமிழகத்தை மிஷன் (மிஷனரி ) ராஜ்யமாக மாற்றி விடுவாராம் நாட்டை கமிஷன் ராஜ்யத்தில் இருந்து மிஷன் ராஜ்யமாக மாற்ற முயலுகிறார் என் சந்தேகம் என்னவென்றால் தமிழ் நாட்டை மிஷனரி ராஜ்யமாக மாற்றிவிடுவார் போல
Rate this:
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
18-டிச-202017:36:03 IST Report Abuse
Swaminathan Chandramouli நேர்மைக்கு அடையாளம் உமது வாழ்க்கை என்று பொதுமக்கள் அனைவரும் உம்மை சிலாகிக்கவேண்டும் நீரே சுய தம்பட்டம் அடித்து கொள்ள கூடாது . சினிமாவில் உம்முடன் நடித்த பாஸ்ட் . ப்ரெசென்ட் பெண்மணிகளுக்கு தேர்தலில் நிற்க சந்தர்பம் கொடுத்து நீவிர் ஆட்சியை அமைக்கும்போது அவர்களை அமைச்சராக்கி அழகு பாருங்கள்
Rate this:
Cancel
Naduvar - Toronto,கனடா
15-டிச-202023:14:04 IST Report Abuse
Naduvar unmai thalaiva...varungala muthalvar
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X