அன்னுார்:''தேர்தல் பணியை வேகப்படுத்தி, உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்,'' என, அ.தி.மு.க.,வினருக்கு மாவட்ட செயலாளர் அறிவுறுத்தினார்.அ.தி.மு.க.,வில், அன்னுார் ஒன்றியம் இரண்டாக பிரிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான அருண்குமாரை சந்தித்தனர்.புதிதாக நியமிக்கப்பட்ட, கோவை புறநகர் வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் கோகுல் தலைமையில், மாணவரணி நிர்வாகிகளும், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் வசந்த் சண்முகம் தலைமையில், பாசறை நிர்வாகிகளும், அன்னுார் தெற்கு ஒன்றிய செயலாளர் சாய் செந்தில் தலைமையில் ஒன்றிய நிர்வாகிகளும், இவரை சந்தித்தனர்.''ஓட்டுச்சாவடி குழு அமைப்பதை வேகப்படுத்த வேண்டும். புதிய உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு வாக்காளர்களுக்கு உதவ வேண்டும்,'' என, மாவட்ட செயலாளர் அறிவுறுத்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE