கருமத்தம்பட்டி:-கிட்டாம்பாளையம் ஊராட்சியில், ரூ.3 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது.கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம்பாளையம் ஊராட்சியில், ரூ.3 கோடி மதிப்பில் சாலை அமைத்தல் மற்றும் குடிநீர் தொட்டி கட்டுதல் உட்பட பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. 4.5 கி.மீ., துாரமுள்ள கிட்டாம்பாளையம் -- வடுகபாளையம் சாலையை அகலப்படுத்தும் பணிக்கு, ரூ.2.70 கோடியும், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்ட, ரூ. 30 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ஊராட்சி நிதி, 2.30 கோடியும், பாரத பிரதமர் சாலை மேம்பாட்டு திட்ட நிதி, ரூ.70 லட்சமும் ஆகும்.பணிகளை, ஊராட்சி தலைவர் சந்திரசேகர், கோவை வடக்கு மாவட்ட பா.ஜ. ,துணைத்தலைவர் சத்தியமூர்த்தி, கோவை வடக்கு மாவட்ட காங்., தலைவர் மனோகரன், கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் தங்கவேல் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE