அன்னுார்:''நலத்திட்டங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்,'' என, சபாநாயகர் அறிவுறுத்தினார்.அ.தி.மு.க.,வில், அன்னுார் ஒன்றியம், தெற்கு, வடக்கு என, பிரிக்கப்பட்டு, புதிதாக நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும், நியமிக்கப்பட்டுள்ளனர்.புதிய நிர்வாகிகள், சபாநாயகர் தனபாலுக்கு சால்வை, மாலை அணிவித்து வாழ்த்து பெற்றனர். சபாநாயகர் பேசுகையில், ''அவிநாசி தொகுதியில், இரண்டு கூட்டு குடிநீர் திட்டங்கள், அவிநாசி அத்திக்கடவு திட்டம், நவீன மின் மயானம் என பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கட்சி நிர்வாகிகள் இத்திட்டங்கள் குறித்து, வீடு வீடாக சென்று தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் (வடக்கு), அம்பாள் பழனிசாமி, (தெற்கு) சாய் செந்தில், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் வசந்த் சண்முகம், மாணவரணி மாவட்ட செயலாளர் கோகுல் குமார், நகர செயலாளர் சவுகத் அலி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE