கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கடும் வார்த்தைகளை தலைவர்கள் தவிர்க்க வேண்டும்: ஐகோர்ட்

Updated : டிச 16, 2020 | Added : டிச 14, 2020 | கருத்துகள் (18+ 85)
Share
Advertisement
சென்னை: 'அரசியல் கட்சித் தலைவர்கள், கடுமையான, அவதுாறான வார்த்தைகளை பிரயோகிப்பதை தவிர்க்க வேண்டும். தமிழக தலைவர்கள், முன் உதாரணமாக திகழ வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.சபாநாயகர், முதல்வர் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக அவதுாறு கருத்துக்கள் கூறியதாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக, அவதுாறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து
கடும் வார்த்தைகள், தலைவர்கள், ஐகோர்ட், அறிவுறுத்தல்

சென்னை: 'அரசியல் கட்சித் தலைவர்கள், கடுமையான, அவதுாறான வார்த்தைகளை பிரயோகிப்பதை தவிர்க்க வேண்டும். தமிழக தலைவர்கள், முன் உதாரணமாக திகழ வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

சபாநாயகர், முதல்வர் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக அவதுாறு கருத்துக்கள் கூறியதாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக, அவதுாறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஸ்டாலின் மனுக்கள் தாக்கல் செய்தார். இம்மனுக்கள், நீதிபதி சதீஷ்குமார் முன், நேற்று விசாரணைக்குவந்தன.


பின், ஸ்டாலினுக்கு எதிரான மூன்று அவதுாறு வழக்குகளை ரத்து செய்து, நீதிபதி உத்தரவிட்டார். நான்காவதாக, ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர், ஏ.நடராஜன் ஆஜரானார்.அவர், ''அரசுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை, ஸ்டாலின் பயன்படுத்தி உள்ளார். இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது. விசாரணையை அவர் எதிர்கொள்ள வேண்டும்,'' என்றார்

இதையடுத்து, நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:எந்த ஆதாரமும் இல்லாமல், பொது வாழ்வில் இருப்பவர் மீது, கடுமையான வார்த்தைகளை தலைவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பேச்சு சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக, எதை வேண்டுமானாலும் பேச உரிமம் இருப்பதாக கருதக் கூடாது.அரசியல் கட்சித் தலைவர்கள், தேவையற்ற விமர்சனங்கள், கடுமையான வார்த்தைகள் பயன்படுத்துவது, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவருக்கும், பெரிதாக தொண்டர்கள் உள்ளனர்.

அவதுாறு வழக்குகளை ரத்து செய்வதால், உரிமம் அளித்து விட்டதாககருதக்கூடாது. இனிமேலாவது, எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவராக இருந்தாலும், கடுமையான வார்த்தைகளை, அவதுாறான வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு முன், சுய ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.ஆரோக்கியமான அரசியலை வளர்த்து, நம் நாட்டிற்கு எடுத்துக்காட்டாக தலைவர்கள் திகழ்வர் என, நீதிமன்றம் நம்புகிறது. தலைவர்கள், மற்றவர்களுக்கு வழிகாட்டியாக திகழ வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

கோடநாடு கொலை வழக்கு சம்பந்தமாக, முதல்வருக்கு எதிராக ஸ்டாலின் விமர்சித்ததை எதிர்த்து, அவதுாறு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதை ரத்து செய்யக்கோரி, ஸ்டாலின் தாக்கல் செய்த மனுக்களும், நேற்று விசாரணைக்கு வந்தன.அரசு தரப்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி, ''இந்த சம்பவம் தொடர்பாக பேசக்கூடாது என, ஏற்கனவே உயர் நீதிமன்றம் தடை விதித்தும், தொடர்ந்து பேசி வந்துள்ளார்,'' என்றார்.அதற்கு, ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரேசன், ''உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு முன், பேசியது குறித்து, அவதுாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. தடை விதித்த பின், அவ்வாறு எதுவும் பேசவில்லை,'' என்றார்.

இதையடுத்து, இந்த வழக்குகளின் விசாரணையை, ஜன., 7க்கு, நீதிபதி சதீஷ்குமார் தள்ளி வைத்தார்.அவதுாறு வழக்குகளின் விசாரணையின் போது, நீதிபதி, 'உரிய ஆதாரங்களுடன் நியாயமான விமர்சனங்களை தெரிவிக்கலாம். அரசியல் ஆதாயத்திற்காக குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது. இதை, இந்த நீதிமன்றமும் ஏற்காது. 'குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரங்கள் இருந்தால், அதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். ஆதாரம் இல்லாமல், குற்றச்சாட்டுகள் கூறக்கூடாது' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (18+ 85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
15-டிச-202016:14:41 IST Report Abuse
Endrum Indian இந்த காழ்ப்புணர்ச்சி வந்ததற்கு ஒரே காரணம் 10 வருடமாக என்னால் கொள்ளையடிக்க முடியவில்லையே என்ற மன அழுத்தம் மட்டும் தான் காரணம்
Rate this:
Cancel
thulakol - coimbatore,இந்தியா
15-டிச-202013:56:54 IST Report Abuse
thulakol தி மு க வினர் திருடுவது கொள்ளை அடிப்பது மற்றவன் சொத்தை அது பெண்ணாக இருந்தாலும் ஆட்டை போடுவது கேட்ட தரமற்ற வார்த்தைகள் பேசுவது பொய் பேசுவது எல்லாம் அவர்களுடைய உதய சூரியன் சின்னம் போல் . திருத்த முடியாது
Rate this:
Cancel
15-டிச-202012:31:20 IST Report Abuse
விடியலை நோக்கி :: வெற்றி நமதே வட நாட்டை விட அசிங்கம் ஆகாமல் பார்த்து கொள்ளணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X