பொது செய்தி

தமிழ்நாடு

நிறைவேறுமா வாக்குறுதி! கூடுதலாக ரூ.50 லட்சம் ஒதுக்கீடு:எதிர்பார்ப்பில் விசைத்தறி உரிமையாளர்கள்

Added : டிச 14, 2020
Share
Advertisement
சோமனுார்:சூலுார் சட்டசபை இடைத்தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்றுவாரா என்று, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் காத்திருக்கின்றனர்.சூலுார் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த கனகராஜ் மறைவையொட்டி, சூலுார் தொகுதிக்கு கடந்த, 2019 மே மாதம் இடைத்தேர்தல் நடந்தது. முதல்வர் பழனிசாமி, சூலுார், சுல்தான்பேட்டை,

சோமனுார்:சூலுார் சட்டசபை இடைத்தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்றுவாரா என்று, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் காத்திருக்கின்றனர்.சூலுார் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த கனகராஜ் மறைவையொட்டி, சூலுார் தொகுதிக்கு கடந்த, 2019 மே மாதம் இடைத்தேர்தல் நடந்தது. முதல்வர் பழனிசாமி, சூலுார், சுல்தான்பேட்டை, கருமத்தம்பட்டி உட்பட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
விசைத்தறியாளர்களின் வங்கி கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என, கருமத்தம்பட்டியில் முதல்வர் வாக்குறுதி அளித்து பேசினார். இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வை சேர்ந்த கந்தசாமி வெற்றி பெற்றார். இந்நிலையில், இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, முதல்வர் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படுமா என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இதுகுறித்து, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக, ஜவுளி உற்பத்தியாளர்களுடன் கூலி உயர்வு குறித்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை. உயர்த்தி வழங்குவதாக அறிவித்த கூலியும் இதுவரை வழங்கவில்லை; குறைத்து தான் வழங்குகின்றனர். இதனால், கடன் சுமை அதிகரித்து, வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. விசைத்தறியாளர்களுக்கான இலவச மின்சாரம் தொடர வேண்டும். தொழிலின் மேம்பாட்டுக்கு ஜவுளி சந்தை அமைக்க வேண்டும். முதல்வர் ஏற்கனவே அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், விசைத்தறியாளர்களுக்கான வங்கி கடனை தள்ளுபடி செய்து, வங்கிகளின் ஜப்தி நடவடிக்கைகளில் இருந்து விசைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும்.
இந்த மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மற்றும் திருப்பூரில் முதல்வரை சந்தித்து மனு அளித்தோம். கைத்தறித்துறை அமைச்சர், மாவட்ட அமைச்சர்களை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். விசைத்தறி தொழிலின் தற்போதைய நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு, கோரிக்கைகள் மீது, முதல்வர் உடனடி நடவடிக்கை எடுத்து, கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றுவார் என, விசைத்தறியாளர்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X