பொது செய்தி

தமிழ்நாடு

வாழவைக்கும் வாழைக்கு காப்பீடு செய்ய அழைப்பு

Added : டிச 14, 2020
Share
Advertisement
சூலுார்:-சூலுார் வட்டாரத்தில் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள், பயிர் காப்பீடு செய்து கொள்ள தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் நந்தினி கூறியதாவது:நடப்பு ரபி பருவத்தில், சூலுார் வட்டாரத்தில், வாழைக்கான பயிர் காப்பீட்டுக்கு, 469 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக, 4,420 செலுத்தி பயிர் காப்பீடு

சூலுார்:-சூலுார் வட்டாரத்தில் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள், பயிர் காப்பீடு செய்து கொள்ள தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் நந்தினி கூறியதாவது:நடப்பு ரபி பருவத்தில், சூலுார் வட்டாரத்தில், வாழைக்கான பயிர் காப்பீட்டுக்கு, 469 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக, 4,420 செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். பேரிடர்களால், வாழைகளுக்கு சேதம் ஏற்பட்டால், ஏக்கருக்கு 88 ஆயிரத்து, 414 இழப்பீடாக பெற்று, நஷ்டத்தில் இருந்து தப்பிக்கலாம்.காப்பீடு செய்ய வரும் மார்ச் 1 ம்தேதி இறுதி நாளாகும். வாழை சாகுபடி விவசாயிகள், சிட்டா, அடங்கல், ஆதார் நகல், வங்கி பாஸ் புத்தகம், ஒரு போட்டோ மற்றும் வி.ஏ.ஓ., சான்றுடன் 'இ--சேவை' மையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பித்து பிரீமியம் செலுத்தலாம். விபரங்களுக்கு, சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X