பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசுடன் ரூ.2,000 நிவாரணம்?

Updated : டிச 15, 2020 | Added : டிச 14, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement
சென்னை : சட்டசபை தேர்தல் வருவதால், பொங்கல் பரிசுடன், ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, 2,000 ரூபாய் ரொக்கமாக வழங்குவது தொடர்பாக, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. மழை வெள்ள பாதிப்புக்கான நிவாரணமாக, இந்த தொகையை, இரண்டு கோடி குடும்பங்களுக்கு வழங்க, திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.தமிழக அரசு, பொங்கல் பண்டிகையின் போது, ரேஷன் கடைகளில், 2.02 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா 1,000 ரூபாய்
பொங்கல் பரிசு, நிவாரணம், தமிழக அரசு

சென்னை : சட்டசபை தேர்தல் வருவதால், பொங்கல் பரிசுடன், ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, 2,000 ரூபாய் ரொக்கமாக வழங்குவது தொடர்பாக, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

மழை வெள்ள பாதிப்புக்கான நிவாரணமாக, இந்த தொகையை, இரண்டு கோடி குடும்பங்களுக்கு வழங்க, திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.தமிழக அரசு, பொங்கல் பண்டிகையின் போது, ரேஷன் கடைகளில், 2.02 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா 1,000 ரூபாய் ரொக்கம், தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை; 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. இதற்காக, 2,250 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது.



பொது ஊரடங்கு


கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க, மார்ச், 25 முதல், பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் வீடுகளில் முடங்கியதால், ஏப்ரல் மாதம், அரிசி கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய் ரொக்கம், அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் போன்றவை, இலவசமாக வழங்கப்பட்டன. சர்க்கரை கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய்; அரிசி தவிர்த்து, மற்ற பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.வைரஸ் பரவல் அதிகம் இருந்த, சென்னை மாவட்டம் முழுதும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் மதுரை மாவட்டங்களில், சில பகுதிகளிலும், ஜூன் இறுதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த பகுதிகளில் வசிக்கும், அரிசி கார்டுதாரர்களுக்கு மட்டும், மீண்டும் 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது.

ஜூலை வரை, அனைத்து கடைகளிலும், ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. 'நிவர், புரெவி' புயல்களால், கடலோர மாவட்டங்களில், நவம்பர் இறுதியிலும், இம்மாத துவக்கத்திலும், கன மழை பெய்தது. 'மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரணமாக, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
தமிழக சட்டசபை பொதுத் தேர்தலுக்கு, இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. ஜெ., மற்றும் கருணாநிதி மறைவுக்கு பின் நடக்கப் போகும் முதல் சட்டசபை தேர்தல். நடிகர் ரஜினியும், புதிய கட்சியை துவக்க உள்ளார்.


அவகாசம்


வரும் தேர்தலில், தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில், அ.தி.மு.க., ஈடுபட்டுள்ளது.இதற்காக, வாக்காளர்களை கவர, 2021 பொங்கல் பண்டிகைக்கு, பொங்கல் பரிசாக, 2,000 ரூபாய் வழங்க, அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதை, அனைத்து கார்டுதாரர்களுக்கும் வழங்கும் வகையில், 5.80 லட்சம் சர்க்கரை கார்டுதாரர்களையும், அரிசி வகைக்கு மாற்ற, அரசு அனுமதி வழங்கியுள்ளது. வரும், 20ம் தேதி வரை, சர்க்கரை கார்டுதாரர்கள், தங்களின் கார்டை அரிசி கார்டாக மாற்ற, அவகாசம் அளிக்கப்பட்டுஉள்ளது.


ஆலோசனை


தமிழக அரசின் நிதி நிலைமை மோசமாக இருந்தாலும், கொரோனா நிவாரண நிதியாக, ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா, 2,000 ரூபாய் வழங்கப்பட்டது. அந்த தொகையை, மத்திய அரசு வழங்க ஒப்புக் கொண்டு உள்ளது.எனவே, மத்திய அரசு அளிக்கும், கொரோனா நிவாரண நிதியை, அப்படியே பொங்கல் பரிசாக, 2,000 ரூபாய் வீதம் வழங்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பை, இம்மாத இறுதியில் வெளியிட்டு, ஜன., முதல் வாரத்திற்குள், கார்டுதாரர்களுக்கு வழங்கி முடிப்பது குறித்து, ஆலோசனை நடந்து வருவதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
15-டிச-202021:00:50 IST Report Abuse
siriyaar எடப்பாடி ஆடாத ஆட்டம் காட்டுகிறார், அண்ணன் அப்பன் பெயரில் கட்சி ஆரம்பிக்கான் ரஜினி ஆன்மீக கட்சி , உதறல் எடுத்து உளறல் வருது. பாவம் தந்தை செய்த இமாலய பாவங்களை தாங்கும் சக்தி இவருக்கு இல்லை,
Rate this:
Cancel
Sundar Raj - TVPM,இந்தியா
15-டிச-202017:30:48 IST Report Abuse
Sundar Raj 'பொங்கல் தமிழர் பண்டிகை என்றால் , இந்த பண்டிகையை கொண்டாடதவர் தமிழரா ? இல்லையா ? . விளக்கம் தேவை' நான் கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் இல்லை? எங்க ஓடிப்போனார்கள் தமிழ், தமிழ் என்று பேசுபவர்கள் ?
Rate this:
Dr என்கிற பெயரில் உள்ள கேடி Suriya - கூவம் காவா ஓரம் ,எத்தியோப்பியா
15-டிச-202020:35:53 IST Report Abuse
Dr என்கிற பெயரில் உள்ள கேடி  Suriya இல்லை அவன் ஹிந்து...
Rate this:
Cancel
Sundar Raj - TVPM,இந்தியா
15-டிச-202015:56:14 IST Report Abuse
Sundar Raj பொங்கல் தமிழர் பண்டிகை என்றால் , இந்த பண்டிகையை கொண்டாடதவர் தமிழரா ? இல்லையா ? . விளக்கம் தேவை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X