சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

Added : டிச 14, 2020
Share
Advertisement
அன்னுார்:குடிநீர் கோரி, பொதுமக்கள், அன்னுாரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அன்னுார் - அவிநாசி சாலையில், 16 நாட்கள் ஆகியும், குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், பேரூராட்சியில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள், நேற்றிரவு, 7:00 மணியளவில், அன்னுார் - அவிநாசி சாலையில், காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில்

அன்னுார்:குடிநீர் கோரி, பொதுமக்கள், அன்னுாரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அன்னுார் - அவிநாசி சாலையில், 16 நாட்கள் ஆகியும், குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், பேரூராட்சியில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள், நேற்றிரவு, 7:00 மணியளவில், அன்னுார் - அவிநாசி சாலையில், காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். ''பேரூராட்சி செயல் அலுவலருக்கு தகவல் தெரிவித்து, விரைவில் தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, இன்ஸ்பெக்டர் உறுதியளித்தார். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியலால், 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X