உடுமலை:தொடர்ச்சியாக காய்கறி சாகுபடி செய்யும், விளைநிலங்களில், மண் வளத்தை மேம்படுத்த, பருவமழைக்காலத்தில், சணப்பை சாகுபடி செய்ய, ஆர்வம் காட்டுகின்றனர்.உடுமலை பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு தொடர்ச்சியாக, ஆண்டு முழுவதும் காய்கறி சாகுபடியை, மேற்கொண்டு வருகின்றனர். இதனால், மண் வளம் குறைந்து, அதிகப்படியாக உரம் கொடுத்தாலும், மகசூலில் பாதிப்பு ஏற்படுகிறது.இப்பிரச்னைக்கு தீர்வாக, பசுந்தாள் உரங்கள் பயிரிட்டு, மண் வளத்தை மேம்படுத்த, வேளாண்துறை சார்பில், பரிந்துரைக்கப்படுகிறது. எனவே, வடகிழக்கு பருவமழைக்குப்பிறகு, உடுமலை பகுதியில், பரவலாக பசுந்தாள் உரமான சணப்பை பயிரிட்டுள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது: விளைநிலங்களில், மண் வளத்தை மேம்படுத்த, சணப்பை பயிரிடுகிறோம். குறைந்த பரா மரிப்பில் வளரும் சணப்பு பயிர், விதைத்த, 45வது நாளில் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் போது, பயிர்களை மடக்கி உழவு செய்கிறோம்.இதனால், மண் வளம் அதிகரிப்பதுடன், நீர்பிடிப்புத்தன்மை அதிகரிக்கிறது. ஆனால், பருவமழை சீசனில், சணப்பை விதை போதியளவு கிடைப்பதில்லை. சில சீசனில் விதை கிடைக்காமல், சணப்பை விதைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இவ்வாறு,தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE