பொது செய்தி

தமிழ்நாடு

நால் ரோட்டில் மீண்டும் பிளக்ஸ் அமைப்பு: விபத்துகள் ஏற்படும் அபாயம்

Added : டிச 14, 2020
Share
Advertisement
மடத்துக்குளம்:மடத்துக்குளம் நால் ரோட்டில், மீண்டும் பிளக்ஸ்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.மடத்துக்குளம் நால்ரோடு, 30க்கும் மேற்பட்ட கிராமபகுதி ரோடுகள் சந்திக்கும் இடமாக உள்ளது. இங்கு வங்கிகள், ஏ.டி.எம்.கள், அரசு மருத்துவமனை, கடைகள் உள்ளன. இதோடு, குமரலிங்கம், கிருஷ்ணாபுரம், காரத்தொழுவு வழித்தடங்களில் சென்று திரும்பும்

மடத்துக்குளம்:மடத்துக்குளம் நால் ரோட்டில், மீண்டும் பிளக்ஸ்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.மடத்துக்குளம் நால்ரோடு, 30க்கும் மேற்பட்ட கிராமபகுதி ரோடுகள் சந்திக்கும் இடமாக உள்ளது. இங்கு வங்கிகள், ஏ.டி.எம்.கள், அரசு மருத்துவமனை, கடைகள் உள்ளன. இதோடு, குமரலிங்கம், கிருஷ்ணாபுரம், காரத்தொழுவு வழித்தடங்களில் சென்று திரும்பும் பஸ்களுக்கான நிறுத்தங்கள் உள்ளன.இதனால், இந்தப்பகுதியை தினமும், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்துகின்ற-னர். பல மாதங்களுக்கு முன், இந்த பகுதியில் தொடர்ந்து பிளக்ஸ் அமைக்கப்பட்டன. அப்போது தமிழகத்தின் பல இடங்களில், பிளக்சால் விபத்துக்கள் நடந்தன. இதனை தொடர்ந்து பொது இடங்களில் பிளக்ஸ் அமைக்கக் கூடாது என, கோர்ட் உத்தரவிட்டது. பல மாதங்களாக இந்த அறிவுறுத்தல் பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் கட்சியினர் மீண்டும் மடத்துக்குளம் நால் ரோட்டில் பிளக்ஸ் கள் அமைத்துள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'நால்ரோட்டை கடப்பவர்களுக்கு பக்கவாட்டில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் பல விபத்துக்கள் நடந்துள்ளன. எனவே, நால்ரோடு மற்றும் பொது இடங்களில் பிளக்ஸ் அமைக்க அனுமதிக்கக்கூடாது' என்றனர்.இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் கூறுகையில், 'பிளக்ஸ் அமைக்க முறையான அனுமதி இல்லை. இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X