பொது செய்தி

தமிழ்நாடு

கிராமந்தோறும் சிறப்பு கால்நடை முகாம்: நோய் பரவலை கட்டுப்படுத்த உடனடி தேவை

Added : டிச 14, 2020
Share
Advertisement
உடுமலை:சீதோஷ்ண நிலை மாற்றத்தால், மாட்டம்மை உட்பட பல்வேறு நோய்த்தாக்குதல் கால்நடைகளுக்கு பரவும் அபாயமுள்ளதால், உடுமலை பகுதி கிராமங்களில், சிறப்பு முகாம்களை நடத்த, கால்நடைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், பால் உற்பத்திக்கான கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ளது.இப்பகுதிகளில், கடந்தாண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி,

உடுமலை:சீதோஷ்ண நிலை மாற்றத்தால், மாட்டம்மை உட்பட பல்வேறு நோய்த்தாக்குதல் கால்நடைகளுக்கு பரவும் அபாயமுள்ளதால், உடுமலை பகுதி கிராமங்களில், சிறப்பு முகாம்களை நடத்த, கால்நடைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், பால் உற்பத்திக்கான கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ளது.இப்பகுதிகளில், கடந்தாண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 61,390 பசு மாடு; 501 எருது, 1,799 எருமை, 3,966 நாட்டு மாடுகள் உள்ளது.செம்மறி ஆடுகள், 12,229, வெள்ளாடுகள், 42,566, என கால்நடைகள் அதிகளவு வளர்க்கப்படுகின்றன. அரசின், விலையில்லா மாடு, ஆடு வழங்கும் திட்டத்தாலும், கணிசமான அளவு, கால்நடைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.தற்போது, பொள்ளாச்சி பகுதியில், துவங்கிய, மாட்டம்மை நோய், மாவட்ட எல்லையிலுள்ள கிராமங்களில், பராமரிக்கப்படும் கால்நடைகளுக்கும் பரவ துவங்கியுள்ளது. இந்நோய்த்தாக்குதல் பரவும் விதம், கட்டுப்படுத்தும் நடைமுறைகள் குறித்து, கால்நடை வளர்ப்போருக்கு தெரிவதில்லை. அதே போல், தொடர் மழைக்கு பிறகு, பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், வெள்ளாடுகளுக்கும் நோய்த்தாக்குதல் பரவி வருகிறது. கால்நடைத்துறை சார்பில், முன், ஊராட்சி அளவிலான, சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வந்தது.கடந்த சில ஆண்டுகளாக இந்த முகாம்கள் நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது.கால்நடை கிளை நிலையங்கள், மருந்தகங்கள் தரம் உயர்த்தப்பட்டாலும், கால்நடை வளர்ப்போருக்கு, போதிய விழிப்புணர்வு இல்லாததால், அங்கு கால்நடைகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை செய்யவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறியவும் ஆர்வம் காட்டுவதில்லை.கிராம அளவில், முகாம்கள் நடத்தும் போது, அங்கு வளர்க்கப்படும் அனைத்து வகையான கால்நடைகளும், சிகிச்சை பெறுவது எளிதாகிறது; சீசன்களில் பரவும் நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள், குறித்து கால்நடைத்துறையினரும், எளிதாக விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். எனவே, கால்நடைத்துறை சார்பில், மீண்டும் கிராம வாரியாக சிறப்பு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கால்நடைத்துறை அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்கவும், வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X