திருப்புவனம் : நான்கு வழிச்சாலையில்திருப்புவனம் அருகே கழுகேர்கடை விலக்கில் சென்டர் மீடியன்களின் உயரம் குறைவாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை 4 வழிச்சாலையும், அதன்பின் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை வரை 10 மீட்டர் அகலத்திற்கு இரு வழிச்சாலை அமைத்துள்ளனர். 4 வழிச்சாலையில் கீழடி, கழுகேர்கடை, மானாமதுரை பைபாஸ் உள்ளிட்ட வளைவுப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.
இதற்கு முக்கியகாரணம் ரோட்டில் சென்டர் மீடியன் பகுதி உயரம் குறைவாக உள்ளது.இதனால், அதிவேகமாகவரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை தாண்டி அடுத்த ரோட்டில் விபத்திற்கு உள்ளாகிறது.எனவே சென்டர் மீடியன்களின் உயரத்தை அதிகரிக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE