பரமக்குடி : பரமக்குடி அருகேயுள்ள பொட்டிதட்டி - மந்திவலசை தடுப்புஅணையில் இருந்து பிரிந்து செல்லும் கால்வாய்களை சீரமைக்காமல் சேதமடைந்துஉள்ளதால், கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் நீடிக்கிறது.
பார்த்திபனுார் வைகை அணையின் குறுக்கே மதகு அணை கட்டப்பட்டு 1975ல் திறக்கப்பட்டது. தொடர்ந்து வலது, இடதுபிரதான கால்வாய்கள் மூலம் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர்பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது.இதன்படி 241 கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில்,பிரிவு கால்வாய்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் கிராமங்களுக்கு செல்லும் பாலங்கள், கரையை உடைக்காத வகையிலான தடுப்புசுவர் பாலங்கள், மடைகள் என நுாற்றுக்கணக்கில் உள்ளது.
இந்நிலையில் மதகு கட்டப்பட்ட ஆண்டு தொடங்கி, 45 வருடங்களாக பெரும்பாலான தடுப்பு பாலங்கள் சீரமைக்காமல் உள்ளனர். இதனால்தண்ணீர் வரும் சமயங்களில் அருகில் உள்ள கிராமங்கள் மற்றும்விளை நிலங்களுக்குள் கரைகளை உடைத்து தண்ணீர் புகும் சூழல்உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் வெள்ளம் வரும் நாட்களில் நீர் வழிப்போக்கு சீர் செய்யாதநிலையில், தண்ணீர் வீணாவதுடன், கிராம மக்கள் வெள்ள நீரில் சிக்கி தவிக்கும்நிலைக்கு தள்ளப்படுவர். இச்சூழலில் வைகை ஆறு மந்திவலசைதடுப்பு அணையில் இருந்து பிரிந்து செல்லும் கால்வாயான, பொட்டிதட்டி பகுதியில் உள்ள கால்வாய் முற்றிலும் சேதமடைந்துள்ளது.இது போன்ற கால்வாய்களை சீரமைத்து, துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்குகோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE