பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 66 மினி கிளினிக்குகள்; முதற்கட்டமாக 9 இடங்களில் துவக்கம்

Added : டிச 14, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 66மினி கிளினிக்குகள் துவக்கப்பட உள்ளன. நேற்று ஒன்பது கிளினிக்குகள் துவக்கப்பட்டன.தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி மினிகிளினிக் திட்டத்தை நேற்று துவக்கி வைத்தார். ராமநாதபுரம் சுகாதார மாவட்டத்தில் 30 கிளினிக்குகள், பரமக்குடி சுகாதார மாவட்டத்தில் 36 கிளினிக்குகள் துவக்கப்பட உள்ளன.நேற்று முதற்கட்டமாக ராமநாதபுரத்தில் வாலாந்தரவை,

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 66மினி கிளினிக்குகள் துவக்கப்பட உள்ளன. நேற்று ஒன்பது கிளினிக்குகள் துவக்கப்பட்டன.

தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி மினிகிளினிக் திட்டத்தை நேற்று துவக்கி வைத்தார். ராமநாதபுரம் சுகாதார மாவட்டத்தில் 30 கிளினிக்குகள், பரமக்குடி சுகாதார மாவட்டத்தில் 36 கிளினிக்குகள் துவக்கப்பட உள்ளன.நேற்று முதற்கட்டமாக ராமநாதபுரத்தில் வாலாந்தரவை, அரியான்குண்டு, காஞ்சிரங்குடி, உப்பூர், சித்துார் ஆகிய 5 இடங்களில் அமைக்கப்படுகிறது. இவை டிச., இறுதிக்குள் செயல்படும். பரமக்குடியில் 4 இடங்களில் செயல்படுகிறது.

மற்றவை ஜன., இறுதிக்குள் செயல்படும்.இந்த கிளினிக்குகளில் தலா ஒரு டாக்டர், நர்ஸ், சுகாதாரப் பணியாளர் இடம் பெறுவர்.காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை இவை செயல்படும், என சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X