ராமநாதபுரம் : திருவாடானை கட்டவிளாகம் பகுதி விவசாயிகள் பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருவாடனை ஒன்றியம்மங்களகுடி, கட்டவிளாகம் ஆகியபகுதிகளில் 2019--20ம் ஆண்டில் பயிர்காப்பீட்டு செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5600 வரை வழங்கப்படுகிறது. இத்தொகை தங்களுக்கு பெயர்அளவில் தொகை வந்து உள்ளது.1500க்கு மேற்பட்டவர்கள் இழப்பீட்டு தொகை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோர்.இதனை கண்டித்தும், உடனடியாக பயிர்காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களுடன் வேளாண் துணை இயக்குனர் சேக்அப்துல்லா, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் விடுப்பட்ட நபர்களுக்கு காப்பீட்டுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினர். இதனையடுத்து கலைந்துசென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE