மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Added : டிச 14, 2020
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட முதுகுத்தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு சார்பில், கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகம் சென்றால் முன்னுரிமை வழங்க வேண்டும். வணிகம் செய்ய சிறிய கடை, அதற்கு தகுந்த இடம் ஏற்பாடு செய்ய உதவ வேண்டும்.தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட முதுகுத்தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு சார்பில், கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகம் சென்றால் முன்னுரிமை வழங்க வேண்டும். வணிகம் செய்ய சிறிய கடை, அதற்கு தகுந்த இடம் ஏற்பாடு செய்ய உதவ வேண்டும்.தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தகுதியானவர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.கல்வி தகுதிக்கேற்ப அரசு பணி அல்லது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்.

சுயதொழில் செய்வதற்கு மானியத்துடன் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்க வேண்டும், பொதுஇடங்களில் சாய்வு தளம் கூடிய கழிப்பறை கட்டிதர வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் மாவட்ட பொருளாளர் குணசேகரன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X