திருவாடானை : திருவாடானையை மையமாக வைத்து ஆர்.டி.ஓ.அலுவலகம் அமைக்கபடும் என்று தேர்தல்நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை அரசியில் கட்சிகள் நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
திருவாடானை தாலுகா இரண்டாக பிரிக்கபட்டு ஆர்.எஸ்.மங்கலம்தனித்தாலுகா 2019ல் உருவானது. இதில் திருவாடானையை தலைமையிடமாக கொண்டு ஆர்.டி.ஓ. அலுவலகம் அமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்தனர்.சட்டசபை தேர்தலின்போது இத்தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் திருவாடானையில் ஆர்.டி.ஓ. அலுவலகம்அமைக்கபடும் என்ற வாக்குறுதியும் அளித்தனர்.
இரு தரப்பினரிடையே ஏற்படும் பிரச்னைக்கு சமாதான கூட்டங்கள் மற்றும் அடிப்படைவசதிகள் கோரி பல்வேறுபுகார் மனுக்கள் கொடுக்க பொதுமக்கள் ராமநாதபுரம் செல்லவேண்டியதுள்ளது. எஸ்.பி.பட்டினம், ஓரியூர், சிறுகம்பையூர், வெள்ளையபுரம் போன்ற பல கிராம மக்கள் 70 கி.மீ.துாரம் வரை செல்ல வேண்டியதுள்ளது.
இது குறித்து ஓரியூர் மகாலிங்கம் கூறியதாவது:திருவாடானை தாலுகா மக்கள் ராமநாதபுரம் செல்லவேண்டுமென்றால் நேரடியாக பஸ் வசதியில்லை. திருவாடானைக்கு சென்று அங்கிருந்து செல்லவேண்டும்.தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி திருவாடானையில் ஆர்.டி.ஓ. அலுவலகம்அமையும் என்றுஎதிர்பார்த்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே பொதுமக்கள் நலன் கருதி திருவாடானையை மையமாக வைத்து ஆர்.டி.ஓ. அலுவலகம் அமைக்க வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE