ராமநாதபுரம் : ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை- அறிவியல் கல்லுாரி நாட்டுநலப்பணி திட்டத்தின் சார்பில் டில்லி குடியரசு தினவிழாவில் பங்கேற்க இரு மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.இக்கல்லுாரி மூன்றாம் ஆண்டு மாணவர்கள் எல்.சதீஷ், கே.சுவாதி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செயலாளர் ராஜாத்தி, முதல்வர் அமானுல்லா ஹமீது, அழகப்பா பல்கலை துணைவேந்தர் ராஜேந்திரன், பதிவாளர் மல்லேஸ் பிரபு, கல்லுாரி வளர்ச்சிக்குழும தலைவர் தனுஷ்கோடி பாராட்டினர்.ஏற்பாடுகளை நாட்டுநலபணி திட்ட அலுவலர் வள்ளிவிநாயகம் செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE