கும்பகோணம் கோட்டம் காரைக்குடி மண்டலத்தில் 11 போக்குவரத்து கிளைகள்உள்ளன. ராமநாதபுரம் டிவிசனில் 6 கிளைகளில் 350க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாவட்டத்தில் 80 சதவீதம் பஸ்களே இயக்கப்படுகின்றன.
எந்தெந்த வழித்தடங்கள்
ராமநாதபுரத்திலிருந்து கிராமங்கள் வழியாக உத்தரகோசமங்கைக்கு இயக்கப்பட்ட 1 ஏ, திருப்பாலைக்குடி தடம் எண் 2, பொட்டகவயல் 2 பி, பாண்டியூர்-3, ரெகுநாதபுரம் 5 பி, முத்துசெல்லாபுரம் 9பி, ஏர்வாடி சென்ற 10, 10ஏ, காஞ்சிரங்குடி 17, பெரியபட்டினம் 18, வாலிநோக்கம் 25, தாமரைக்குளம் 27, உள்ளிட்ட 15க் கும் மேற்பட்ட கிராமப்புற வழித்தடங்களில் பஸ்கள் இதுவரை இயக்கப்படவில்லை.
இதனால் கிராமப்புற கூலித் தொழிலாளர்கள் பிற ஊர்களுக்கு சென்று கூலி வேலைக்கு செல்ல முடியவில்லை. தற்போது விவசாயப் பணிகள் நடப்பதால் அதிக பணம் செலவழித்து ஆட்டோக்களில் செல்வதால் அவதிப்படுகின்றனர்.
பஸ்கள் இயக்கப்படாததாலும், பழைய பஸ்களுக்கு பதில் புதிய பஸ்கள் வழங்கப்படாததாலும், சாலை வரி, இன்ஸ்சூரன்ஸ் கட்டாததாலும் பல பஸ்கள் டிப்போக்களில் முடங்கியுள்ளன.இந்த பஸ்களில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படாத நிலையில் கட்டாய விடுப்பு அளிக்கப்படுகிறது. விடுப்பு கையிருப்பு இல்லாத நிலையில் சம்பள இழப்பு ஏற்படுவதாக தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, வெளியூர் பஸ்கள் 100 சதவீதம் இயக்கப்படுகின்றன. டவுன் பஸ்கள் 80 சதவீதம்தான் இயக்கப்படுகின்றன.பள்ளிகள் திறக்கப்பட்டால் முழுமையாக இயக்கப்படும். இருப்பினும், கிராமங்களில் தேவைக்கு ஏற்ப இயக்கப்படுகிறது. டிரைவர், கண்டக்டர்களுக்கு முறையாக பணி வழங்கப்படுகிறது, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE