ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் ராங் ரூட்டில் சென்ற மினி பஸ்சை போக்குவரத்து போலீசார் நிறுத்தி டிரைவரை எச்சரித்த போது, 'எதுவானாலும் ஓனர் கிட்ட கேளுங்க..' அலட்சியமாக பதில் கூறினார். லைசென்ஸ் கேட்ட போது, அதற்கும் ஓனரிடம் கேளுங்க,' என்று கூறிய சம்பவத்தால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
ராமநாதபுரம் நகர் கேணிக்கரை சந்திப்பில் நெரிசலை கட்டுப்படுத்த நேற்றுமுன்தினம் மாலை4:30 மணியளவில் போக்குவரத்து போலீஸ்காரர் செந்தில்குமார் பணியில் இருந்தார்.அப்போது அரண்மனையில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட் சென்ற பஸ்சில் பயணிகள் ஏறிக் கொண்டிருந்தனர். அப்போது அதே வழியில் வந்த மற்றொரு மினி பஸ் ராங்க் ரூட்டில் வலதுபுறமாக வளைந்து வேகமாக சென்றது. அப்போது வேறு வாகனங்கள் வந்திருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த பஸ்சை துரத்திச் சென்று மடக்கினர். டிரைவரிடம் ராங்ரூட்டில் வேகமாக வந்தது குறித்து கேட்ட போது, 'எதுவானாலும்ஓனரிடம் பேசிக்கொள்ளுங்கள்,' என்றார். டிரைவிங் லைசென்ஸ்சை கேட்ட போது, 'என்னிடம் இல்லை, எதுவானாலும் ஓனர்கிட்ட கேளுங்க சார்,' என்று கூறிவிட்டு பஸ்சை எடுத்துச் சென்றார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE