கோவை:வருவாய் வழி திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற, தகுதியானோர் பட்டியல் திரட்ட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வை, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த, எட்டாம் வகுப்பு மாணவர்கள் எழுதுகின்றனர். இதில் வெற்றி பெறுவோருக்கு, பிளஸ் 2 வரை, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படுகிறது.பத்தாம் வகுப்புக்கு மேல், சுயநிதி பள்ளிகளில் சேருதல், தொழில்நுட்ப படிப்பில் சேர்ந்தால், இத்தொகை பெற முடியாது.உரிய பள்ளியில் இருந்து, ஆண்டுதோறும் மாணவர்களின் தகவல்களை புதுப்பிப்பது அவசியம். ஆனால், இதை முறையாக பின்பற்றாததால், உதவித்தொகை கிடைப்பதில்லை என்ற புகார் எழுந்தது.மாவட்ட வாரியாக, கடந்த நான்கு ஆண்டுகளாக, போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்களின் தகவல்களை, இம்மாத இறுதிக்குள் புதுப்பிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.கோவை மாவட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், ஆயிரத்து 200 மாணவர்கள், இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களின் விபரங்களை விரைவில் சரிபார்த்து புதுப்பிக்க, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE