சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடிகை சித்ரா தற்கொலை வழக்கு ;கணவர் ஹேம்நாத் கைது

Updated : டிச 15, 2020 | Added : டிச 14, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை : சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் விடுதியில் சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் மரணம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை சித்ராவின்

சென்னை : சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.



latest tamil news



சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் விடுதியில் சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் மரணம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை சித்ராவின் தற்கொலை குறித்து அவரது கணவர் ஹேம்நாத்திடம் கடந்த 6 நாட்களாக போலீசார் விசாரிக்கின்றனர். அத்துடன் ஹேம்நாத்தின் தந்தை, சித்ரா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர், விடுதியின் ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.


latest tamil news



தனது மகள் சித்ராவின் தற்கொலைக்கு ஹேம்நாத் தான் காரணம் என சித்ராவின் தாய் விஜயா குற்றம்சாட்டியிருந்தார். சித்ராவின் தற்கொலை வழக்கை போலீசாரும் , வருவாய் கோட்டாட்சியரும் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

சின்னத்திரை நடிகர்களுடன் சித்ரா நடனமாடியது கணவர் ஹேம்நாத்திற்கு பிடிக்கவில்லை. திருமணம் ஆன நாள் முதல் எந்த நடிகருடன் நடனமாடினாய் என கேட்டு டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். தற்கொலை செய்த 9 ஆம் தேதி அன்றும், படப்பிடிப்பு முடிந்து சித்ரா வந்ததும் மீண்டும் யாருடன் நடனமாடினாய் என கேட்டு தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியதில் செத்து போ என ஹேம்நாத் கூறியதால் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் கூறப்படுகிறது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து சித்ராவின் தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து உள்ளனர். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட உள்ளார். தற்போது கைது செய்யப்பட்ட ஹேம்நாத் பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
15-டிச-202020:16:44 IST Report Abuse
தமிழ்வேள் நடிகைகளின் பின்னால் சென்றால் இதுதான் கதி
Rate this:
Cancel
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
15-டிச-202014:48:23 IST Report Abuse
Chakkaravarthi Sk பெரிய திரை மற்றும் சின்னத்திரையில் நடிப்பவர்களுக்கு மனோதத்துவ அறிவுரை கூற எதாவது ஒரு குழு அமைக்கலாம். யாருக்கு என்ன பிரச்சினை என்றாலும் வெளிப்படையாக பேசி ஆலோசித்து முடிவு எடுக்கலாம். இவ்வளவு சீக்கிரம் முடிக்கவேண்டிய அவசியம் இல்லை. சில சமயம் அழகு என்பது தூரத்தில் இருந்து சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டிய ஒன்று என்று பெரும்பாலான இளம் பருவத்தினருக்கு ஒரு பாடமாக இது அமைந்துள்ளது. தொட்டால் சுடும் என்ற பின்னரும், தொட்டால் சுடத்தான் செய்யும். நடிகர்கள் சமுதாய பிரச்சினைகளுக்கு பொங்குவது போல், இதற்கும் எதாவது எதிர் வினை ஆற்றுவார்களா?
Rate this:
Cancel
15-டிச-202013:38:19 IST Report Abuse
ஆரூர் ரங் விட்டுக் கொடுத்து🙄 வாழத் தெரியாதவர் ஏன் நடிகையை மணந்தார் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X