சீரானது மின் கம்பம் செட்டிபாளையம், சமத்துவபுரம், மூன்றாவது வீதியில் உள்ள, மின் கம்பத்தின் மேல் பகுதி, சிதிலமடைந்து, எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது என, 'இன்பாக்ஸ்' பகுதியில் படத்துடன், செய்தி வெளியானது. இதையடுத்து, மின் வாரியத்தினர், இக்கம்பத்தின் மேல் பகுதியில், விழும் நிலையில் இருந்த பாகத்தை அகற்றி, புதிதாக அமைத்துச் சென்றனர்.- துரை, சமத்துவபுரம்.
நீங்கியது ஆபத்துசிவானந்தா காலனி, கரூர் வைஸ்யா வங்கி எதிரில், சிட்டி யூனியன் வங்கி பின்புறம் உள்ள, டிரான்ஸ்பார்மர் உயர் அழுத்த கம்பிகள், கம்பத்தின் வெளியில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது, இது குறித்து, 'இன்பாக்ஸ்' பகுதியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. மின் வாரிய ஊழியர்கள் அக்கம்பத்தை ஆய்வு செய்து, கம்பத்துக்கு வெளியில் இருந்த, கம்பிகளை பாதசாரிகள் கைபடாத உயரத்தில், மாற்றி அமைத்து சென்றுள்ளனர்.- ராஜேஸ்குமார், சிவானந்தாகாலனி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE