மதுரை: மனு கொடுக்க வந்த மூதாட்டியை, கலெக்டர் காரில் ஏற்றி சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.மதுரை கலெக்டர் அலுவலகத்தில், நேற்று காலை, மனுவுடன் ஒரு மூதாட்டி நின்றிருந்தார். அவரிடம் கலெக்டர் அன்பழகன் விசாரித்தபோது, அவர் கோரிப்பாளையம் பாத்திமா, 78, எனத் தெரிந்தது.அவர், வயல்காட்டு தெருவில், பாண்டியராஜன், வனஜா தம்பதி வீட்டில், 50 ஆயிரம் ரூபாயில் ஒத்திக்கு குடியிருந்தார்.
தற்போது, வீட்டை காலி செய்து அருகில் வசிக்கிறார். ஒத்திப் பணத்தை திரும்பி தராததால், மனு கொடுக்க வந்தது தெரிந்தது. உடனடியாக, பாத்திமாவை, அவரது வீட்டிற்கு தன் காரில் கலெக்டர் அழைத்து சென்றார். தாசில்தார் முத்துவிஜயனிடம், விசாரித்து, விரைவில் பணத்தை பெற்று கொடுக்க உத்தரவிட்டார். தாசில்தார் விசாரித்தபோது, வனஜாவும் வறுமையில் இருப்பதால், வீட்டை மறு ஒத்திக்கு விட்டு, பணத்தை திருப்பி வழங்குவதாக உறுதியளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE