கோவை:. 15-பெண்கள் மீதான குடும்ப வன்முறை, வரதட்சணை, குழந்தை திருமணம் என நடப்பாண்டில் ஒருங்கிணைந்த சேவை மைய எண் மூலம், 251 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, குழந்தை திருமண நிகழ்வுகள் அதிகரித்து வருவதால், தகவல் அறிந்தவர்கள் தயங்காமல், '181' எனும் எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு, மாவட்ட சமூக நல அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.ஏதோ ஒரு சூழலில் பெண்கள் தொடர்ந்து, பல்வேறு வன்முறைகளுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு உடனடி உதவிக்கரம் நீட்டும் நோக்கில் துவக்கப்பட்டதே, ஒருங்கிணைந்த சேவை மையம். கோவை மாவட்டத்தில் பூமார்க்கெட் பகுதியில் பெண்கள், முதியோர் பாதுகாப்புக்கான இம்மையம் செயல்பட்டு வருகிறது. இதற்காக, 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் செயல்பாட்டில் உள்ளது.கடந்தாண்டு கோவையில், 58 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. நடப்பாண்டில், தற்போதைய நிலவரப்படி, 76 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதில், 54 திருமணங்கள் நடப்பதற்கு முன்பும், 22 திருமணங்கள் நடந்து முடிந்த பின்பும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.இது குறித்து, மாவட்ட சமூகநல அலுவலர் தங்கமணி கூறியதாவது:பெண்களின் பாதுகாப்பு கருதி செயல்பட்டு வருவதே, 'ஒன் ஸ்டாப் சென்டர்' என்று கூறப்படும் ஒருங்கிணைந்த சேவை மையம்.வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறை, பாலியல் பலாத்காரம், குழந்தை திருமணம், பணியிடத்தில் பாலியல் சீண்டல் உட்பட, எவ்வித பிரச்னையாக இருப்பினும் தயங்காமல், 181 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ஆலோசனை, மருத்துவ உதவி, இருப்பிட, உணவு வசதி, கவுன்சிலிங் போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக்கொடுத்து, பிரச்னைக்கு தீர்வு காண வழிவகை செய்யப்படுகிறது.இந்த மையத்தில் நடப்பாண்டில், 251 புகார்கள் பதிவு செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளன. பிரச்னையில் உள்ள பெண்கள், எவ்வித தயக்கமும் இன்றி, இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.தவிர, குழந்தை திருமணங்களை தடுக்கவும், இச்சேவை உதவுகிறது. குழந்தை திருமணம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்தான் புகார் அளிக்க வேண்டுமென்பதில்லை. உடன் படிப்பவர்கள், பக்கத்து வீட்டார் என, தகவல் அறிந்த யாராக இருந்தாலும், புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரின் விபரம் வெளியிடப்பட மாட்டாது.இவ்வாறு, அவர் கூறினார்.கடந்தாண்டு கோவையில், 58 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. நடப்பாண்டில், தற்போதைய நிலவரப்படி, 76 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதில், 54 திருமணங்கள் நடப்பதற்கு முன்பும், 22 திருமணங்கள் நடந்து முடிந்த பின்பும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE