கோவை,:கோவையில் ரூ.20 கோடி மோசடி வழக்கில் கைதானவரின், ஜாமின் மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.கோவை, பீளமேட்டில் 'ஐ டெக் சொல்யூஷன் லிமிடெட் 'என்ற பெயரில் ஆன்லைன் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால், 100 நாளில், இரண்டரை லட்சம் ரூபாய் திருப்பி தருவதாக கூறி விளம்பரப்படுத்தினர். 800 க்கும் மேற்பட்டோர், 20 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்தனர்.ஆனால், முதிர்வு தேதி முடிந்தும், பணத்தை திருப்பி தராமல், நிறுவனத்தை மூடி விட்டு தப்பினர். அந்நிறுவன பங்குதாரர்கள் பீளமேட்டை சேர்ந்த ரிதுவர்ணன், கேரளாவை சேர்ந்த கேளத் ஸ்ரீ ஹரி, பாலன் நாயர் ஆகியோரை தேடி வந்தனர். ரிதுவர்ணனை நவ., 6ம் தேதி கைது செய்தனர். அவரை ஜாமினில் விடுவிக்க கோரி, கோவை டான்பிட் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி ரவி தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE