பொழியப்போகுது கரன்சி மழை... உடன்பிறப்புகளிடம் உற்சாக அலை!| Dinamalar

பொழியப்போகுது கரன்சி மழை... உடன்பிறப்புகளிடம் உற்சாக அலை!

Updated : டிச 15, 2020 | Added : டிச 15, 2020
Share
பணி நிமித்தமாக, காளப்பட்டி சென்றிருந்த சித்ராவும், மித்ராவும், அவிநாசி ரோட்டில், ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.''அரசியல் வட்டாரம் சூடுபிடிக்க ஆரம்பிச்சிருச்சு போலிருக்கே,'' என, ஆரம்பித்தாள் மித்ரா.''ஆமாப்பா, தி.மு.க., மகளிரணி செயலாளர் கனிமொழி, நம்மூர்ல ஆறு நாள் முகாமிட்டு, தேர்தல் பிரசாரம் செஞ்சாங்க.அவரை சந்திச்ச நிர்வாகிகள், கோவை தெற்கு, வடக்கு,
 பொழியப்போகுது கரன்சி மழை... உடன்பிறப்புகளிடம் உற்சாக  அலை!

பணி நிமித்தமாக, காளப்பட்டி சென்றிருந்த சித்ராவும், மித்ராவும், அவிநாசி ரோட்டில், ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

''அரசியல் வட்டாரம் சூடுபிடிக்க ஆரம்பிச்சிருச்சு போலிருக்கே,'' என, ஆரம்பித்தாள் மித்ரா.

''ஆமாப்பா, தி.மு.க., மகளிரணி செயலாளர் கனிமொழி, நம்மூர்ல ஆறு நாள் முகாமிட்டு, தேர்தல் பிரசாரம் செஞ்சாங்க.அவரை சந்திச்ச நிர்வாகிகள், கோவை தெற்கு, வடக்கு, சிங்காநல்லுார், கவுண்டம்பாளையம் ஆகிய நான்கு தொகுதிகளையும், தி.மு.க.,வுக்கு ஒதுக்கணும்னு சொல்லியிருக்காங்க,''

''முந்தைய தேர்தல்களில் காங்கிரஸ், கம்யூ., கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்கியதால், உடன்பிறப்புகள் சோர்ந்து போயிருக்காங்க. அவுங்களை களப்பணிக்கு கொண்டு வரணும்னா, தொகுதியை கூட்டணி கட்சிக்கு கொடுக்காம, நேரடியா போட்டி போடனும்னு சொல்லியிருக்காங்க,''

''அப்புறம், என்ன சொன்னாங்க,''

''ஆளுங்கட்சி தரப்புல, ஒவ்வொரு வார்டையும் இரண்டா பிரிச்சு, நிர்வாகிகள் நியமிச்சு, தேர்தல் வேலை செய்றாங்க. இதுதவிர, இளைஞர், இளம்பெண் பாசறைக்கும் புது நிர்வாகிகள் நியமிச்சிருக்காங்க. அதனால, தி.மு.க., தரப்பிலும் தேர்தல் பணியை, பலப்படுத்தணும்னு சொல்லியிருக்காங்க,''

''அதனால, ஒவ்வொரு வார்டையையும் பகுதி வாரியா பிரிச்சு பொறுப்பு குழுவும், ஒவ்வொரு குழுவுக்கும், 10 பேரையும் நியமிச்சிருக்காங்க. முதல்கட்டமா, கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்துக்கு நிர்வாகிகள் நியமிச்சு, பெயர் பட்டியலை வெளியிட்டிருக்காங்க. உடன்பிறப்புகள் உற்சாகத்தில் இருக்காங்க,''

''மகளிர் சுய உதவி குழுக்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கச் சொல்லி, அறிவுரை வழங்கி இருக்காங்களாமே,'' என, கொக்கி போட்டாள் மித்ரா.

''ஆமா...ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கற மகளிர் சுய உதவிக்குழுக்களை, எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வர அறிவுரை சொல்லியிருக்காங்க.

''ஆளுங்கட்சிக்கு சாதகமா தேர்தல் பணிக்கு களமிறக்கவும், 'பிளான்' வச்சிருக்காங்க. பூத் கமிட்டிக்கு வாரந்தோறும் செலவுக்கு பணம் கொடுப்பாங்க; அதே மாதிரி, மகளிர் குழுவுக்கும் பணம் கொடுக்கறதுக்கு பேசியிருக்காங்க,''

''அப்ப, கரன்சி மழை கொட்டப் போகுதுன்னு சொல்லுங்க,''

''ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும் ரூ.2,000 பட்டுவாடா செஞ்சதால, ரத்தத்தின் ரத்தங்கள் சந்தோஷத்துல மிதக்குறாங்க. தேர்தலுக்கு இன்னும் நாலு மாசம் இருக்கு. இப்பவே, சூட்கேசை திறக்க ஆரம்பிச்சுட்டாங்க. இனி, என்னென்ன செய்யப் போறாங்களோன்னு, தி.மு.க., உள்ளிட்ட எதிர் கூடாரம் அங்கலாய்ப்புல இருக்கு,''

''கமல் கட்சிக்காரங்களும் களத்துல இறங்கிட்டாங்களாமே,'' என, கேட்டாள் மித்ரா.

''ஆமா...புது வாக்காளர் சேர்ப்பு முகாமில், மக்கள் நீதி மய்ய கட்சிக்காரங்களும் கமல் பேட்ஜ் அணிந்து உட்கார்ந்து, தேர்தல் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. தேர்தல் அலுவலர்களுக்கு தி.மு.க., தரப்புல பிரியாணி பொட்டலம் கொடுத்திருக்காங்க,''

''ரத்தினபுரி, சாயிபாபா கோவில், வெங்கிட்டாபுரம் பகுதியில் நடந்த முகாம்களில், வாக்காளர் சேர்ப்பு படிவங்களை கட்சிக்காரங்க, கொத்து கொத்தா பறிச்சிட்டு போயிட்டாங்களாம். தடுக்க முடியாம, அரசு பணியாளர்கள் சிரமப்பட்டு இருக்காங்க. இனி, முகாம் நடத்துனா, போலீஸ் பாதுகாப்பு கொடுக்கச் சொல்லணும்னு பேசிக்கிட்டாங்க,

'''அதெல்லாம் இருக்கட்டும்; கனிமொழி கூட்டத்தில், கட்சிக்காரங்களுக்குள் 'கசமுசா' நடந்துச்சாமே,''

''அதுவா, சாயிபாபா காலனியில் இருக்கற ஒரு ஓட்டலில், தொழில்துறையினரை சந்திச்சு பேசுனாரு. அந்த கூட்டத்துக்கு வந்த, 'மாஜி' எம்.எல்.ஏ., மகனை, உள்ளே விடாததால, கொந்தளிச்சிட்டாரு. 'நீங்க ஓவரா பண்றீங்க; பதில் சொல்ல வேண்டியிருக்கும்; பார்த்துக்குங்க' என்றபடி, அங்கிருந்து, அவர் கிளம்பியிருக்காரு,''

''ஓஹோ... அப்படியா,'' என்ற மித்ரா, ஹோப் காலேஜ் பாலம் அருகில் உள்ள பேக்கரி முன் ஸ்கூட்டரை நிறுத்தினாள்.காளான் பப்ஸ், காபி ஆர்டர் கொடுத்த சித்ரா, ''போலீசுல இருந்த காதல்ஜோடியை பிரிச்சிட்டாங்களாமே,'' என, கேட்டாள்.

''ஆமாக்கா, பொருளாதார குற்றப்பிரிவு போலீசுல, இரண்டு தலைமை காவலர்கள் ஒன்னாவே சுத்திட்டு இருந்திருக்காங்க. குற்றவாளிகளை பிடிக்க அனுப்புனா ஜோடி சேர்ந்து, ஊர் சுத்திட்டு இருந்திருக்காங்க. இவுங்க காதல் விவகாரம் பெருசாகி, ஐ.ஜி., காதுக்கு போயிருக்கு. ஜோடியை பிரிச்சு, வெவ்வேறு ஸ்டேஷனுக்கு மாத்திட்டங்க,''

''எனக்கொரு போலீஸ் மேட்டர் தெரியும்; சொல்றேன் கேளு,'' என்றபடி, பப்ஸ் சாப்பிட்ட சித்ரா,''க.க.சாவடி ஆர்.டி.ஓ., செக்போஸ்ட்டில், லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ்காரங்க ரெண்டு தடவை 'ரெய்டு' நடத்தி இருக்காங்க. ரெண்டு தடவையும் மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் மேல, கணக்கில் வராத பணம் பிடிச்சது தொடர்பா, வழக்கு பதிவு செஞ்சுருக்காங்க,''

''இருந்தாலும், அந்தம்மா மேல போக்கு வரத்து துறை அதிகாரிகள், துறை ரீதியா எந்த நடவடிக்கையும் எடுக்கலை.விருதுநகரில் செஞ்சது மாதிரி, வீட்டுக்கு போயி, கட்டு கட்டா அள்ளுனா தான், துறை ரீதியா நடவடிக்கை எடுப்பாங்க போலிருக்குன்னு, லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ்காரங்க புலம்புறாங்க,'' என்றாள்

.''அக்கா, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், 'குளுகுளு' அறையை விட்டு வெளியே வரவே மாட்டேங்கிறாங்க.
அவுங்க, எங்க நடவடிக்கை எடுக்கப் போறாங்க,''''மேட்டுப்பாளையத்துக்கு இயக்குற, தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதுது. கவுண்டம்பாளையம் கவுண்டர் மில் ஸ்டாப்பை கடந்ததும், அசுர வேகத்துல பறக்குறாங்க. பிரேக் போடுறபோது, பஸ்சுக்குள்ளேயே பயணிகள் கீழே விழுறாங்கன்னா பார்த்துக்குங்க, எவ்ளோ வேகத்துல பஸ் ஓடுதுன்னு,''

''இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கலை. உயிர் பலி ஏற்பட்டாதான், மாவட்ட நிர்வாகம் கண்விழிக்கும் போலிருக்கு,'' என, நொந்து கொண்ட மித்ரா, காபியை உறிஞ்ச ஆரம்பித்தாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X