பிரிட்டனில் பரவும் புதுவகை கொரோனா

Updated : டிச 15, 2020 | Added : டிச 15, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
லண்டன் : பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளையொட்டி, வைரசின் புதிய மாறுபாடு கண்டறியப்பட்டுள்ள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவுவதால், ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன. உலகின் பல்வேறு நாடுகளையும் கொரோனா வைரசின் தாக்கம் அச்சுறுத்தி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த

லண்டன் : பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளையொட்டி, வைரசின் புதிய மாறுபாடு கண்டறியப்பட்டுள்ள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவுவதால், ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.latest tamil newsஉலகின் பல்வேறு நாடுகளையும் கொரோனா வைரசின் தாக்கம் அச்சுறுத்தி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் பிரிட்டனில் கொரோனா தாக்கம் தீவிரமடைந்து பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் லண்டனில் கொரோனா வைரஸ் புதிய மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


latest tamil newsஇதையடுத்து பிரிட்டனில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.. இது குறித்து சுகாதாரதுறை செயலர் மாட் ஹான்காக் கூறுகையில், லண்டன் , கென்ட் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் கொரோனா வைரசின் புதிய மாறுபாடு' வல்லுனர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இது பிரிட்டனின் பல்வேறு இடங்களில் தற்போதைய நிலையை விட வேகமாக பரவி வருகிறது.இது கொரோனா வைரசின் புதிய மாறுபாட்டால் ஏற்பட்டது. இந்த புதிய மாறுபாடு கொண்ட கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை கொடுக்கிறது. 7 நாட்களுக்கு ஒரு முறை சில பகுதிகளில், பாதிப்பு இரு மடங்காகிறது.


latest tamil news
விரைவாகவும், தீர்க்கமானதாகவும் நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயம். பிரிட்டனின் தெற்கில், இந்த மாறுபாட்டுடன் கூடிய கொரோனா வைரஸ் தாக்கியதாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கண்டறிந்துள்ளோம். இது குறித்து உலக சுகாதார அமைப்பிற்கு தெரிவிக்கப்பட்டு ள்ளதுடன், பிரிட்டன் விஞ்ஞானிகளும் ஆய்வு செய்து வருகின்றனர். இவ்வாறு கூறினார்.
கட்டுப்பாடுகள்

இதனையடுத்து, லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் பப்கள், பார்கள், உணவகங்கள் மற்றும் விருந்து நடக்கும் இடங்கள், தியேட்டர் உள்ளிட்ட பொழுது போக்கு பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன. கடைகள் மற்றும் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். பொது இடங்களில் 6 பேர் வரை சந்தித்து கொள்ளலாம். வெவ்வெறு வீடுகளில் உள்ளோர். ஒரே இடத்தில் கூடக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
15-டிச-202016:19:58 IST Report Abuse
Vijay D Ratnam கொரோனா வைரஸை உருவாக்கி, உலகம் முழுக்க பரப்பி, ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்தை நாசமாக்கி, தொழில்களை முடக்கி, உலக மக்களை முடக்கிப்போட்ட சீனாவை உலக நாடுகள் ஒன்றிணைந்து சுடுகாடு ஆக்காமல் விட்டு வைத்தால் சீனா உலகை சுடுகாடாக்கிவிடும்.
Rate this:
Srinivasan Natarajan - Ashford,யுனைடெட் கிங்டம்
15-டிச-202016:29:23 IST Report Abuse
Srinivasan Natarajanஎஸ் யு ஆர் right...
Rate this:
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
20-டிச-202010:45:28 IST Report Abuse
Yaro Oruvanமக்கள் சீன பொருட்களை வாங்காமல் தவிர்த்தாலே போதும்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X