கொடி கட்டி பறக்குது ஊழல்... கொடி காட்டி மிரட்டுது கும்பல்!

Updated : டிச 15, 2020 | Added : டிச 15, 2020
Share
Advertisement
திருப்பூர் பெருமாள் கோவிலுக்கு சென்ற சித்ராவும், மித்ராவும், சுவாமி தரிசனம் முடித்து, அரிசி கடை வீதி வழியே சென்றனர். அப்போது, வழக்கமாக அரிசி வாங்கும் கடைக்குள் இருவரும் நுழைய, விவசாயிகள் போராட்டம் தொடர்பான செய்தியை, 'டிவி'யில் பார்த்து கொண்டிருந்தார் கடை உரிமையாளர்.''போன வாரம் வேளாண்மை சட்ட மசோதாவுக்கு எதிராக ஸ்டிரைக் நடந்தப்ப, 'பந்த்'-க்கு ஆதரவு திரட்டறோம்னு
 கொடி கட்டி பறக்குது ஊழல்... கொடி காட்டி மிரட்டுது கும்பல்!

திருப்பூர் பெருமாள் கோவிலுக்கு சென்ற சித்ராவும், மித்ராவும், சுவாமி தரிசனம் முடித்து, அரிசி கடை வீதி வழியே சென்றனர். அப்போது, வழக்கமாக அரிசி வாங்கும் கடைக்குள் இருவரும் நுழைய, விவசாயிகள் போராட்டம் தொடர்பான செய்தியை, 'டிவி'யில் பார்த்து கொண்டிருந்தார் கடை உரிமையாளர்.

''போன வாரம் வேளாண்மை சட்ட மசோதாவுக்கு எதிராக ஸ்டிரைக் நடந்தப்ப, 'பந்த்'-க்கு ஆதரவு திரட்டறோம்னு சொல்லி, சூரிய கட்சியினரும், தோழர்களும் பண்ணின அளப்பறை, மக்களை ரொம்பவே பாதிச்சுடுச்சு,'' என ஆரம்பித்தாள் சித்ரா.

''ஆமாங்க்கா... நானும் கேள்விப்பட்டேன். பந்த்-க்கு முந்தின நாள், தி.மு.க.,வில் புதுசா பதவி வாங்கின ஒரு நிர்வாகி, தொண்டர்களுடன், அரிசிக்கடை வீதியிலுள்ள கடைகளில், நோட்டீஸ் கொடுத்திருக்காரு''

''அப்ப, அங்கிருந்த ஒரு போட்டோகிராபர், போட்டோ எடுக்க 'ட்ரை' பண்ணியிருக்காரு. அதைப்பார்த்த நிர்வாகி, 'இப்ப நாங்க ஆதரவு மட்டும் கேட்கிறோம். நாளைக்கு கடைய அடைக்கலைன்னா, அராஜகம் பண்ணுவோம்; முடிஞ்சா அதையும் போட்டோ எடுத்து பேப்பர்ல போடு,'னு சொல்லியிருக்காரு,'' சித்ரா சொல்லி முடித்ததும், கடை உரிமையாளர், 'ஏம்பா, நாகராஜ், அவங்களுக்கு என்ன வேணும்னு பாரு. நல்ல அரிசியா எடுத்து குடு,'' என்றார்.

''இதாவது பரவாயில்லீங்க்கா. காட்டுவளவுல 'பந்த்'-க்கு ஆதரவு கேட்டு கடை, கடையா நோட்டீஸ் கொடுத்த தி.மு.க., நிர்வாகி ஒருத்தரு, கடைக்காரங்ககிட்ட, வெள்ளை பேப்பர்ல கையெழுத்தும் வாங்கியிருக்காரு. கடை அடைப்புக்கு ஆதரவா கையெழுத்து போட்டிருக்கீங்க; மீறி திறந்தீங்கன்னா நடக்கிறதே வேறன்னு மிரட்டியும் இருக்காரு'', என்றாள் சித்ரா.

''இது, சுனா பானா காமெடி மாதிரில்ல இருக்கு'' என, சிரித்த சித்ரா, எதிரே வந்தவரிடம், ''ஹாய்... நந்தகோபால், எப்டி இருக்கீங்க. வீட்ல எல்லாம் சவுக்கியமா,'' என, நலம் விசாரித்தாள்.

அரசாங்க முத்திரையுடன், சென்று கொண்டிருந்தது ஒரு கார். அதைப்பார்த்தவுடன், ''கவர்மென்ட் ஆபீசில் வேல பாக்கற, அசிஸ்டென்ட் கூட கார் வாங்கற அளவுக்கு சம்பாதிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.

''இது, எப்படிங்க?''

''பல்லடம் பத்திர பதிவு ஆபீஸ்ல வேல பாக்கற, ஒரு ஓ.ஏ., தான் அவரு. கமிஷன் பணத்துல கார் வாங்கினது மட்டுமில்லாம, சம்பளத்துக்கு டிரைவரும் வச்சிருக்காராம். ஆறு வருஷமா ஒரே இடத்துல இருக்கிறதால, எல்லா டாகுக்மென்ட் ரைட்டரையும் கைக்குள்ள போட்டு வச்சிருக்காரு. கிரயத்துக்கு தகுந்த மாதிரி, கமிஷன் பிக்ஸ் பண்ணி நல்லா கல்லா கட்றாரு'' என்றாள் மித்ரா.

அப்போது, மித்ராவின் மொபைல் போன் சிணுங்க, ''மூர்த்தி அங்கிளா? நான் டிரைவிங்ல இருக்கேன்; அப்புறம் கூப்பிடறேன் அங்கிள்'' எனக்கூறி, இணைப்பை துண்டித்தாள்.

தொடர்ந்து இருவரும், தங்கள் தோழியை பார்க்க, கோர்ட் வீதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு செல்லும் ரோட்டில் பயணித்தனர்.

''இப்ப கிராம வார்டு மெம்பர்ங்க காட்டுல தான் மழை. கரைப்புதுார்ல இருக்கற சுயேட்சை வார்டு உறுப்பினர் ஒருத்தரு, பஞ்சாயத்து தலைவரோட அடிக்கடி பிரச்னை பண்ணிட்டே இருந்திருக்காரு. அவரோட 'எதிர்பார்ப்ப' புரிஞ்சுட்ட தலைவரு, அவருக்கு 'லேப்டாப்' வாங்கி கொடுத்ததோட மட்டுமில்லாம, சேவை மையமும் வச்சு கொடுத்திருக்காரு,''

''சவுண்ட் பார்ட்டியா இருந்த அந்த உறுப்பினரு, இப்ப 'சைலன்ட்' ஆகிட்டாராம். அதுமட்டுமில்லாம, தலைவர பத்தி 'வாட்ஸ் ஆப்'ல புகழ்ந்து தள்றாராம்,''

''கோவிந்தா… கோவிந்தா… காசுதான் எல்லாமேன்னு ஆகிடுச்சு,'' என ஆதங்கப்பட்ட மித்ரா,

''சரக்கு விக்கறவங்களோட கைகோர்த்து, ஒருத்தர் வசூலில் பட்டய கெளப்பறாராம்,'' என்றாள்.

''இது எங்கடி?''

''தாராபுரம் மதுவிலக்கு பிரிவுல இருக்கும் ஒருத்தர், 'சரக்கு' கோஷ்டிகளோடு சேர்ந்துட்டு, நல்லாவே காசு பாக்கறாராம். பல லகரம் சம்பாரிச்சு, பங்களா டைப்பில வீடு கட்டிட்டு இருக்காராம்,'' என்றாள் சித்ரா.

ரோட்டோரம், 'சிவபாரத்' என பெயர் எழுதிய லாரி, டயர் பஞ்சராகி நின்று கொண்டிருந்தது. அதை பார்த்தவாறே மித்ரா, ''இந்த புகாரெல்லாம், கமிஷனர் காதுக்கு போகாதா...,'' என கேட்டாள்.

''அடப்போடி... இந்த மாதிரி புகாருக்கு ஆளான பல பேருக்கு, டிரான்ஸ்பர் போட்டும், அவங்க போகாம அதே இடத்துலதான் 'குப்பை' கொட்றாங்க. டிரான்ஸ்பர் விவகாரத்துல, பெரிய அதிகாரி அடக்கி வாசிக்கிறார். இன்ஸ்பெக்டர், ஏ.சி., அந்தஸ்துல இருக்க ஆபிசர்களோடு ஜீப் டிரைவரா இருக்க பல பேரு, ரொம்ப வருஷமா ஒரேயிடத்திலதான் இருக்காங்க. அவங்களும், தங்களோடு பங்குக்கு, நல்லாவே வருமானம் பார்க்குறாங்க, '' மித்ரா.

தோழியை பார்த்து விட்டு, இருவரும் வீட்டுக்கு கிளம்ப, 'ஸ்மார்ட் சிட்டி' வேலை நடந்து கொண்டிருந்ததால், 'டேக் டைவர்ஷன்' பலகை வைக்கப்பட்டிருந்தது.

''ஸ்மார்ட் சிட்டி வேலை பல இடங்கள்ல ஸ்பீடா செய்றாங்க. இதனால கடைக்காரங்க பல பேரு ரொம்ப குஷியா இருக்காங்களாம்'' என்றாள் மித்ரா.

''இதனால, அவங்களுக்கு என்ன லாபம்?'' சந்தேகம் கிளப்பினாள், சித்ரா.

''கார்ப்பரேஷன் லிமிட்ல, பார்க்கிங் வசதி இல்லாத கடைகள் நிறைய இருக்கு. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துல, ரோடு வேலை நடக்கிற இடங்கள்ல, ரோட்டின் ரெண்டு பக்கமும் சாக்கடை கால்வாய் கட்டி, பிளாட்பார மேடை அமைக்கிறாங்க,''

''இதனால், ஒவ்வொரு கடைக்கு முன்னாடியும், ஏழடி வரைக்கும் பிளாட்பாரம் போடுவாங்க. கார்ப்பரேஷன் ஆபீசர்கள், கடை உரிமையாளர்களிடம் பேசி, அவங்களுக்கு தகுந்த மாதிரி, பிளாட்பாரத்தோட உயரத்த மாத்திக்க அனுமதி கொடுத்திட்டாங்களாம். இந்த அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு, ஆபீசர்களுக்கு, கணிசமான பணத்தை, கடைக்காரங்க கொடுத்திடறாங்க,'' என்றாள் சித்ரா.

'அக்கா... கொஞ்சம் அதிகமா காசு குடுத்தீங்கன்னா, உங்க வீட்டுக்கே, கான்கிரீட்ல ரோடு போட்டு குடுத்துடுவாங்க,'' என சிரித்த மித்ரா,

''ரெஜிஸ்டர் ஆபீஸ் ஊழல் கொடிகட்டி பறக்குது பாத்தீங்களா?'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள்.

''ஆமாண்டி. அந்த ஆபீசுல, நாலு உதவியாளர் ஒன்னா சேர்ந்து கூட்டணி வச்சுகிட்டு, டூப்ளிகேட் ரசீதை வச்சு, பல கோடி ரூபாய் சுருட்டிட்டாங்க. இதுக்கு, மேலதிகாரியும் உடந்தையாம். இதைப்பத்தி இன்னும் ஆழமா, விசாரிச்சா, இன்னும் பல பேரோட பேர் வெளிய வரும்,''

''கரெக்டா, சொன்னீங்க. அக்கா, திருப்பூரில் மட்டுமல்ல, எல்லா பக்கமும் இதுபோல நடந்திருக்காலம் என்ற சந்தேகம், ஐ.ஜி.,க்கு வந்திடுச்சாம். அதனால, இப்பிரச்னை இப்போதைக்கு முடியாதுன்னு சொல்றாங்க,''

''எல்லாம் சரிடி. ஒரு நேர்மையான ஆபீசர் தலைமையில குழு போட்டு, விசாரிச்சா மட்டுந்தான் உண்மை வெளியே வரும். இல்லாட்டி, அது உறங்கிட்டு, ஊழல் பேய் தலய விரிச்சாடும்டி,'' சொன்ன சித்ராவை, இடைமறித்த மித்ரா, ''இல்லக்கா... உண்மை என்னைக்குமே உறங்காது. கண்டிப்பா வெளியே வந்தேதான் தீரும்,'' என்றாள்.

அதை ஆமோதித்த சித்ரா, ''ஏண்டி, அறநிலையத்துறை கோவில், ஒரே மாதிரியான ரூல்ஸ் பாலோ பண்ண வேண்டியதுதானே. பிரதோஷத்துக்கு எல்லா கோவிலிலும், பக்தர்களை அனுமதிச்சாங்க,''

''ஆனா, அவிநாசி கோவிலில் மட்டும், யாரையும் விடலையாம். அதிகாரிகிட்ட கேட்டா, 'மேலிடத்துக்கு உத்தரவு'னு சொல்றாராம். இதனால, ஜனங்க ரொம்பவே அதிருப்தியாயிட்டாங்க. இது தொடர்பா, பக்தர்கள் குழு ஒன்று, ஹையர் அபிஷியல்ஸ்கிட்ட, மனு கொடுக்க போறாங்களாம்,'' என்று சொன்ன அவள், வீடு நோக்கி வண்டியை விரட்டினாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X