திருப்பூர்:திருப்பூரில் உள்ள அரசு பள்ளி மற்றும் பள்ளி கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு, 'ஸ்மார்ட் கார்டு' வினியோகிக்கப்பட உள்ளது.ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட திறன் அட்டை, 'ஸ்மார்ட் கார்டு' வடிவில் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்திற்கு முதல்கட்டமாக, 8 ஆயிரத்து, 74 அட்டைகள் தருவிக்கப்பட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:தலைமையாசிரியர்களிடம் ஸ்மார்ட் கார்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன. கைக்கு வந்ததும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள் பணிகாலத்தில் தினசரி அணிவது அவசியம்.இதில் ஆசிரியர்களின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்படுவதால், சீனியாரிட்டி படி பதவி உயர்வு, பணிநிரவல் உள்ளிட்ட பணிகள் எளிதில் மேற்கொள்ளலாம். எத்தனை பேர் ஓய்வு பெறுகின்றனர், பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க இயலும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE