திருப்பூர்:பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில், ராபி பருவ காப்பீடு அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வாகன பிரசாரம் துவக்கப்பட்டது.விவசாயிகளுக்கு ஏற்படும் எதிர்பாராத இழப்புகளை சரி செய்வதற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து பிரதான் மந்திரியின் 'பசல் பீமா யோஜனா' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில், விவசாயிகள் பயிர்களை காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக, எக்டர் ஒன்றுக்கு வெங்காயம் பயிருக்கு பிரீமியம் தொகை, 5218 ரூபாய். மரவள்ளிக்கு பிரீமியம் தொகை 3,917 ரூபாய். அதேபோல், வெங்காயத்திற்கு காப்பீடு செய்ய, 2021ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி; மரவள்ளிக்கு மார்ச், 1ம் தேதி; கரும்புக்கு, அக்., 31ம் தேதி என, குறிப்பிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் செய்யப்பட்டுள்ளது.இத்திட்டம் தொடர்பான மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வாகன பிரசாரம் துவங்கியது.கலெக்டர் அலுவலகத்தில் புறப்பட்ட இந்த வாகனத்தை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) மகாதேவன், துணை இயக்குனர் வடிவேல் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இந்த வாகனம், 15 நாட்கள் மாவட்டம் முழுவதும் இயக்கப்படவுள்ளது. அதேநேரம், இந்தத்திட்டத்தில் பயன் பெற பயனாளிகள் ஆதார் எண், சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் புகைப்படம் போன்ற ஆவணங்களைக் கொண்டு நேரடியாக பொது சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அல்லது வங்கிகள் மூலமாக செலுத்தலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE