பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை சந்தையில் ரூ.1.5 கோடிக்கு வர்த்தகம்

Added : டிச 15, 2020
Share
Advertisement
திருப்பூர்:தொடர் மழையால் பசும்புல் வளர்ச்சி அதிகரித்துள்ளதால், நேற்று நடந்த கால்நடை சந்தைக்கு கன்றுகுட்டிகள் குறைவாக வந்தது.திருப்பூர் தென்னம்பாளையத்தில் திங்கள்கிழமை தோறும் கால்நடை சந்தை நடக்கிறது. மாடு, எருமை, பசுக்கள் பல்வேறு பகுதியில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும். மாவட்டத்தில் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் வியாபாரிகள், கால்நடை வளர்ப்போர்

திருப்பூர்:தொடர் மழையால் பசும்புல் வளர்ச்சி அதிகரித்துள்ளதால், நேற்று நடந்த கால்நடை சந்தைக்கு கன்றுகுட்டிகள் குறைவாக வந்தது.திருப்பூர் தென்னம்பாளையத்தில் திங்கள்கிழமை தோறும் கால்நடை சந்தை நடக்கிறது. மாடு, எருமை, பசுக்கள் பல்வேறு பகுதியில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும். மாவட்டத்தில் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் வியாபாரிகள், கால்நடை வளர்ப்போர் வருவர்.நேற்று நடந்த சந்தைக்கு, 400 எருமை, 450 மாடுகள் உட்பட ஆயிரம் கால்நடைகள் வரத்தாக இருந்தது. நல்ல தரமான மாடு, 35 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. பத்து நாட்களுக்கு முன் பெய்த தொடர் மழையால் கிராமங்களில் பசும்புல் வளர்ச்சி அதிகரித்துள்ளது.வறண்ட பூமி செழிப்படைந்துள்ளது. ஒன்றரை கோடி ரூபாய் என்ற அளவில் வர்த்தகம் நடந்ததாக சந்தை ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X