திருப்பூர்:விடுபட்டவருக்கு இலவச 'லேப்-டாப்' வழங்க வேண்டுமென கலெக்டரிடம், கல்லுாரி மாணவியர் மனு அளித்தனர்.திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, நேரில்வந்து, மனுக்களை பெட்டியில் செலுத்தி சென்றனர்.l திருப்பூர், செயின்ட் ஜோசப் கல்லுாரி மாணவியர் கொடுத்த மனுவில், 'அரசு பள்ளியில் பயின்ற (2017-18) எங்களுக்கு, இலவச 'லேப் -டாப்' கிடைக்கவே இல்லை. கல்லுாரி கல்விக்கு பயன்படுத்தும் வகையில், 'லேப்-டாப்' வழங்கி உதவ வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.l திருப்பூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் பொது நல சங்கம் மற்றும் தமிழ்நாடு தியாகி குமரன் பொது தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த மனுக்களில், 'ஏழை, எளிய மக்கள், அதிக வாடகை கொடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சொந்த இடம் மற்றும் வீடில்லாத, ஏழை, எளிய மக்களுக்கு, அரசு கட்டும் அடுக்குமாடி வீடுகளை ஒதுக்கி கொடுக்க வேண்டும்,' என்று தெரிவித்துள்ளனர்.l சமூகநீதி கட்சியினர் கொடுத்த மனுவில்,' காங்கயம் ரோடு, மணியகாரம்பாளையம் பகுதியில், 30 அருந்ததியர் குடும்பம் வசித்து வருகிறது. அப்பகுதி மக்களுக்கு, அரசு நிலத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்,' என்று தெரிவித்துள்ளனர்.l செவந்தாம்பாளையம் மக்கள் கொடுத்த மனு வில், 'கோவில் திருவிழாவின் போது அன்னதானம் மற்றும் வழிபாடு நடத்த, அருகில் உள்ள நிலத்தை பயன்படுத்தி வருகிறோம். அந்த இடத்தில் கோவில் மண்டபம் கட்ட அனுமதிக்க வேண்டும்,' என்று கோரிக்கை வைத்துள்ளனர்.l ஆனைமலையாறு -நல்லாறு திட்ட விவசாயிகள் கூட்டமைப்பினர் கொடுத்த மனுவில், 'குண்டடம், சடையபாளையம் ஊராட்சியில், பேட்டைகாளிபாளையம் செல்லும் ரோடு மண் பாதையாக இருக்கிறது; விரைவில் தார்ரோடாக மாற்ற வேண்டும், என்று கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE