சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டூவீலர்' தொடர் திருட்டு: வாலிபருக்கு தர்மஅடி

Added : டிச 15, 2020
Share
Advertisement
திருப்பூர்;திருப்பூர், அரிசி கடை வீதியில் நிறுத்தி சென்ற டூவீலர்களை திருடிய வாலிபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.திருப்பூர், ஊத்துக்குளி ரோடு - கூலிப்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார், 40. மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம், திருப்பூர் அரிசி கடை வீதியில், டூவீலரை நிறுத்தி விட்டு, கடைக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொண்டிருந்தார்.வெளியே நிறுத்தியிருந்த

திருப்பூர்;திருப்பூர், அரிசி கடை வீதியில் நிறுத்தி சென்ற டூவீலர்களை திருடிய வாலிபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.திருப்பூர், ஊத்துக்குளி ரோடு - கூலிப்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார், 40. மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம், திருப்பூர் அரிசி கடை வீதியில், டூவீலரை நிறுத்தி விட்டு, கடைக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொண்டிருந்தார்.வெளியே நிறுத்தியிருந்த டூவீலரை, வாலிபர் ஒருவர் திருடி செல்வது தெரிந்தது. உடனே, அவரை விரட்டி சென்றார். கொஞ்சம் துாரத்தில் சம்பந்தப்பட்ட வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.விசாரணையில், பெருமாநல்லுாரை சேர்ந்த பார்த்திபன் என்பதும், இவர் அதே பகுதியில் நிறுத்தப்பட்ட, இரண்டு டூவீலர்களை காலையில் திருடியது தெரிந்தது. மூன்றாவது டூவீலரை திருடிய போது சிக்கியது தெரிந்தது. தகவலின் பேரில், தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, வாலிபரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். திருடிய டூவீலர்கள் எங்கு உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X