திருப்பூர்:வாக்காளர் பெயர் சேர்ப்பு அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது; கடந்த ஒரு மாதத்தில், 67 ஆயிரத்து, 690 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஒரு மாதத்தில், 67 ஆயிரத்து, 690 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். மொத்தம், ஒரு லட்சத்து, 03 ஆயிரத்து, 003 பேர் விண்ணப்பித்துள்ளனர்.படிவம் வாயிலாக, 63 ஆயிரத்து, 840 பேரும், 'ஆன்லைன்' மூலம், 3,850 பேரும் பெயர் சேர்க்க கோரியும், பெயர் நீக்கம் செய்ய, 17 ஆயிரத்து, 598 பேர்; 'ஆன்லைன்' மூலம், 547 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.திருத்தம் கோரி, 8,336 பேரும், 'ஆன்லைனில்', 2,009 பேரும், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் கோரி, 6,438 பேரும், 'ஆன்லைனில்' 384 பேரும், வெளிநாடுகளில் வசிக்கும் வாக்காளர் பெயர் சேர்க்கும், 6 'ஏ' படிவத்தில், ஒருவர் மட்டும் விண்ணப்பித்துள்ளார்.கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறியதாவது:பெறப்பட்ட விண்ணப்பங்கள், ஒட்டுச்சாவடி நிலை அலுவலர் மூலமாக பரிசீலிக்கப்படும். கள ஆய்வின் அடிப்படையில், உரிய நடவடிக்கை கோரி பரிந்துரை செய்யப்படும். அவர்களது பரிந்துரை அடிப்படையில், வாக்காளர் பதிவு அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.இறந்த, குடிபெயர்ந்த வாக்காளர் பெயர்களை நீக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்து, ஜன., 20ம் தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE