தஞ்சாவூர் : தாயை அரிவாளால் வெட்டி கொலை செய்து, மகனும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
தஞ்சாவூர், கும்பகோணம் அருகே செருகுடியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 58; கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மலர்கொடி, 55. இவர்களுக்கு, மூன்று மகன்கள்; மூத்த மகன் பாலகிருஷ்ணன், 35, சற்று மனநலம் பாதித்தவர்.நேற்று முன்தினம் இரவு, பாலகிருஷ்ணன், தாயை அரிவாளால் தலையில் வெட்டி கொலை செய்து, அவரும் மின் விசிறியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.நேற்று காலை, பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலகிருஷ்ணன் சகோதரர்கள் இருவரும் தாயையும், சகோதரனையும் தேடினர். அப்போது, வீட்டினுள் இருவரும் இறந்து கிடந்தது தெரிந்தது.
சுவாமிமலை போலீசார், இருவரது உடல்களை கைப்பற்றி, கும்பகோணம் அரசு மருத்துவ மனைக்கு, அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE