ஊட்டி:ஊரடங்கு தளர்வுக்கு பின், 8 மாதங்களுக்கு பிறகு, ஊட்டியில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் திரளாக வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள், சாக்லெட், வர்க்கி உள்ளிட்ட தின்பண்டங்களை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவராஜ், நந்தகுமார் தலைமையில் இரு குழுவினர், தாவரவியல் பூங்கா, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட பேக்கரி, சாக்லெட் உள்ளிட்ட கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், காலாவதியான, 15 கிலோ சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. பொருட்களில் தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்த, 25 கடைகளுக்கு 'நோட்டீஸ்' வினியோகிக்கப்பட்டது.அதிகாரிகள் கூறுகையில்,' ஆயிரக்கணக்கான பயணிகள் நாள்தோறும் ஊட்டிக்கு வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும், பொருட்கள் காலாவதி இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE