அரசியல் செய்தி

தமிழ்நாடு

'விவசாயிகளின் நண்பர் மோடி': பா.ஜ., பிரசாரம் இன்று துவக்கம் 

Added : டிச 15, 2020
Share
Advertisement
கோவை:வேளாண் சட்டங்களில் உள்ள நன்மைகளையும், உண்மைகளையும் கிராமங்கள் தோறும் சென்று விவசாயிகளிடம் எடுத்துரைக்க, 'விவசாயிகளின் நண்பர் மோடி' என்ற பெயரில், இன்று முதல் தீவிர பிரசாரம் செய்ய, பா.ஜ., முடிவு செய்துள்ளது.பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:காங்., தி.மு.க., கம்யூ., உள்ளிட்ட எதிர்கட்சிகளின் பொய்பிரசாரத்தை முறியடிக்கவும்,

கோவை:வேளாண் சட்டங்களில் உள்ள நன்மைகளையும், உண்மைகளையும் கிராமங்கள் தோறும் சென்று விவசாயிகளிடம் எடுத்துரைக்க, 'விவசாயிகளின் நண்பர் மோடி' என்ற பெயரில், இன்று முதல் தீவிர பிரசாரம் செய்ய, பா.ஜ., முடிவு செய்துள்ளது.பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:காங்., தி.மு.க., கம்யூ., உள்ளிட்ட எதிர்கட்சிகளின் பொய்பிரசாரத்தை முறியடிக்கவும், உண்மையான விவசாயிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தும் இடைத்தரகர்களின் முகத்திரையை வெளிக்கொண்டு வரவும், பா.ஜ., தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.தமிழகம் முழுவதும், கிராமம் கிராமமாக பா.ஜ., நிர்வாகிகள் சென்று, வேளாண் சட்டத்தின் நன்மைகளையும், உண்மைகளையும், விவசாயிகளிடமும், மக்களிடமும் விளக்கிக்கூறுவர். இதற்காக, 'விவசாயிகள் நண்பர் மோடி' என்ற பெயரில் டிச., 15 (இன்று) முதல் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். வேளாண் சட்டங்கள் குறித்து எளிதில் புரியும் வகையில், விளக்க கையேடுகள் வழங்கப்படும்; விளக்கப்பேரணிகளும் நடத்தப்படும்.இந்த பிரசார பயணத்தில், மத்திய அமைச்சர்களும் பங்கேற்பர். இதன் வாயிலாக, டில்லியில் விவசாயிகள் என்ற பெயரில் இடைத்தரகர்கள் மற்றும் போலி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்கள் விரைவில் நீர்த்துப்போகும்.இவ்வாறு, நாகராஜ் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X