ஒரே நாளில் கோடீஸ்வரர்தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் நரீஸ் சுவன்ன சிங். இவர் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தபோது, மஞ்சள் நிறத்தில், மெழுகுபோல் ஒரு பொருள் கிடைத்தது. அதை நண்பர்களிடம் எடுத்துச் சென்று விசாரித்தபோதுதான் தெரிந்தது, 100 கிலோ எடை கொண்ட அந்த கட்டி திமிங்கலத்தின் வாந்தி என்றது. இது பல கோடிக்கு விலை போயுள்ளது. திமிங்கலத்தின் வாந்தியால், ஒரு நபர் கோடீஸ்வரர் ஆன சம்பவம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.கோபமான சிறுமிகுட்டி சிறுமி தன் தாயுடன் யார் பலசாலி என்பதை நிருபிப்பதற்காக போட்டி போடுகிறார். போட்டி ஆரம்பம் ஆவதற்கு முன்பு வரை, 'கியூட்'டாக சிரித்துக் கொண்டிருந்த சிறுமி, போட்டி ஆரம்பித்ததும், அம்மாவின் கையை கீழே தள்ளுவதற்காக, மிகவும் கோபமாக கத்திக்கொண்டே விளையாடுகிறார். மொபைல் போனில் எடுக்கப்பட்ட இந்த காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி பலரையும் கவர்ந்துள்ளது.அனுபவம் வேண்டும்மலைப்பாதையில் டிரைவர் ஒருவர், சிறிய கனரக வாகனத்தை ஓட்டி வருகிறார். அனுபவம் இல்லாத அவர் வழக்கம்போல வேகமாக ஓட்டியதால், வளைவு ஒன்றில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விடுகிறது. இதனால், வாகனத்தில் இருந்தவர்கள் கீழே குதித்து உயிர் தப்பிக்கின்றனர். ஆனால், அந்த வாகனமோ பள்ளத்தில் பல அடி துாரம் உருண்டு சென்று நொறுங்கி விழுகிறது. பதைபதைக்கும் இந்த காட்சிகள், வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.நமக்கு எதுக்கு வம்புகுட்டி சிறுமி ஒருவர், 'டிவி'யை பார்த்துக் கொண்டே, அதில் நடிகை ஆடுவதுபோலவே அசத்தலாக டான்ஸ் ஆடுகிறார். இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவளது செல்லப்பிராணி குஷியில், வால் ஆட்டிக் கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் சிறுமி அதிவேக 'ஸ்டெப்' போட்டு டான்ஸ் ஆடுவதை பார்த்து, பயந்து போன நாய்க்குட்டி, 'நமக்கு எதுக்கு வம்பு' என்பதுபோல அங்கிருந்து சன்னமாக நகர்ந்து விடுகிறது. மொபைல் போனில் எடுக்கப்பட்ட இந்த காட்சிகள், வலைதளங்களில் வைரலாகி பலரையும் கவர்ந்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE