விழுப்புரம் : கடன் பிரச்னையால், மூன்று குழந்தைகளை கொன்று, கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மோகன், 37; தச்சு தொழிலாளி. மனைவி விமலேஸ்வரி, 30; மகள்கள் ராஜ்ஸ்ரீ, 6; நித்யஸ்ரீ, 5; மற்றும் மகன் சிவபாலன், 4.மோகன், தச்சு பட்டறை வைத்து, தொழில் செய்து வந்தார். காலை, 9:00 மணிக்கு பட்டறைக்கு வரும் மோகன் நேற்று வரவில்லை. கடை ஊழியர்கள், மோகனின் மாமனார் ஜெயகுருவிற்கு தகவல் தெரிவித்தனர்.மின் விசிறிஜெயகுரு, மொபைல் போனில் தொடர்பு கொண்டும், பதில் இல்லை. அவர் மற்றும் உறவினர்கள், மோகன் வீட்டிற்கு சென்றனர். வீடு உட்புறம் தாழ் போடப்பட்டிருந்தது.
கதவை உடைத்து, உள்ளே சென்றனர். வீட்டின் ஹாலில், மின் விசிறியில் மோகன் துாக்கிட்டு இறந்து கிடந்தார். ஒரு அறையில் விமலேஸ்வரியும், மற்றொரு அறையில், மூன்று குழந்தைகளும், ஒரே மின் விசிறியில் துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர்.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் மற்றும் வளவனுார் போலீசார், உடல்களை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில், மோகன், தனியார் நிதி நிறுவனத்தில், 5 லட்சம் மற்றும் வங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், 15 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியுள்ளார்.
எட்டு மாதங்களாக தொழிலில் போதிய வருமானம் இல்லை. நிதி நிறுவனம் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், சில தினங்களுக்கு முன் மோகன் வீட்டிற்கு வந்து, கடன் தொகையை கேட்டுள்ளனர். இதனால், மனமுடைந்த மோகன் நேற்று முன்தினம் இரவு, மூன்று குழந்தைகளையும் துாக்கிலிட்டு கொலை செய்து, மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.நேற்று முன்தினம் இரவு, மோகன், 'நுாடுல்ஸ்' வாங்கி வந்து மனைவி, குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். அந்த உணவில் விஷம் கலந்து கொடுத்து, தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கந்து வட்டி இல்லை விழுப்புரம் எஸ்.பி., ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''கந்து வட்டி பிரச்னையால், தற்கொலை செய்து கொள்ளவில்லை. மோகன் குடும்பத்தினரின் தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE