பொது செய்தி

தமிழ்நாடு

'டாஸ்மாக்கில் என்ன தான் நடக்கிறது?'

Added : டிச 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை : 'டாஸ்மாக்' மது வகைகளுக்கு எதன் அடிப்படை யில் விலை நிர்ணயிக்கப்படுகிறது, கூடுதலாக விற்பனை செய்வதை தடுக்க வழிகாட்டுதல் என்ன' என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் 'டாஸ்மாக்கில் என்ன தான் நடக்கிறது என்பதை, நாங்களே ஒரு நாள் ஆய்வு செய்யப்போகிறோம்' என தெரிவித்தனர். அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா தாக்கல் செய்த பொதுநல

மதுரை : 'டாஸ்மாக்' மது வகைகளுக்கு எதன் அடிப்படை யில் விலை நிர்ணயிக்கப்படுகிறது, கூடுதலாக விற்பனை செய்வதை தடுக்க வழிகாட்டுதல் என்ன' என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் 'டாஸ்மாக்கில் என்ன தான் நடக்கிறது என்பதை, நாங்களே ஒரு நாள் ஆய்வு செய்யப்போகிறோம்' என தெரிவித்தனர்.

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில், 5,823 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தீபாவளியின்போது, இரண்டு நாட்களில், 466 கோடி ரூபாய்கு மது விற்பனை நடந்துள்ளது. நிர்ணயித்ததை விட அதிக விலைக்கு விற்கின்றனர்.போலி மது விற்கப்படுகிறது. இதை தடுக்க வேண்டும். ரசீது வழங்காவிடில், மதுவால் ஏற்படும் உடல் ரீதியான பிரச்னைக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் நிவாரணம் பெற முடியாது. மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனு செய்தார்.நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. டாஸ்மாக் தரப்பு, 'முறைகேடுகளை தவிர்க்க, கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. தவறு செய்யும் ஊழியர்களை, 'சஸ்பெண்ட்' செய்கிறோம்' என தெரிவித்தது.நீதிபதிகள்: மது விற்பனையானது, கொள்ளை அடிப்பதற்கு இணையானது. அதுவும் மது அருந்துவோரிடம் கூடுதல் விலைக்கு விற்று கொள்ளை அடிக்கின்றனர். டாஸ்மாக்கில் என்னதான் நடக்கிறது என்பதை, நாங்களே ஒரு நாள் ஆய்வு செய்யப் போகிறோம்.

டாஸ்மாக் விவகாரத்தில், ஒவ்வோர் அரசியல் கட்சியும், பெயரளவிற்கு தான் ஒருவரை ஒருவர் மேடைகளில் விமர்சனம் செய்கின்றன.இவ்வாறு, நீதிபதிகள் அதிருப்தியை வெளியிட்டனர். தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:டாஸ்மாக் மது வகைகளுக்கு, எதனடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது, நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக விற்பனை செய்வதை தடுக்க, எத்தகைய வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன, விதிகளை மீறும் ஊழியர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

எந்தெந்த மது உற்பத்தி நிறுவனங்களிடம், டாஸ்மாக்கிற்கு மது வகைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன, அந்நிறுவனங்களின், 10 ஆண்டு வரவு செலவு விபரங்களை ஜன., 7ல் தாக்கல் செய்ய, டாஸ்மாக் மேலாண்மை இயக்குனருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
15-டிச-202002:48:33 IST Report Abuse
.Dr.A.Joseph மிக குறுகிய காலத்தில் டாஸ்மாக்கில் வேலை செய்பவர்கள் அனைவரும் லட்சாதிபதிகளாகி விட்டனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X