சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உடல்களை வாங்க மறுத்து மறியல்

Added : டிச 15, 2020
Share
Advertisement
பந்தலுார் : காட்டு யானை தாக்கி இறந்த தந்தை, மகன் உடல்களை வாங்க மறுத்து பொதுமக்கள், 10 மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், பந்தலுார், கொளப்பள்ளி டான்டீ பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ், 48; கூடலுார் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர். இவரது மகன் பிரசாந்த், 20. கடந்த, 13ம் தேதி மாலை, இருவரையும், யானை தாக்கி கொன்றது. கடந்த, 10ம் தேதி நாகமுத்து என்பவரும், யானை தாக்கி

பந்தலுார் : காட்டு யானை தாக்கி இறந்த தந்தை, மகன் உடல்களை வாங்க மறுத்து பொதுமக்கள், 10 மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம், பந்தலுார், கொளப்பள்ளி டான்டீ பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ், 48; கூடலுார் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர். இவரது மகன் பிரசாந்த், 20. கடந்த, 13ம் தேதி மாலை, இருவரையும், யானை தாக்கி கொன்றது. கடந்த, 10ம் தேதி நாகமுத்து என்பவரும், யானை தாக்கி இறந்தார்.அடுத்தடுத்த சோகத்தால் ஆத்திரமடைந்த பொதுக்கள், உடல்களை எடுக்க விடாமல், முற்றுகையில் ஈடுபட்டனர். பின், உடல்கள் பந்தலுார் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், உடல்களை வாங்க மறுத்து, நேற்று காலை, 10:-00 மணி முதல், 10 மணி நேரம், பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தமிழகம் - கேரளா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் பேச்சுக்கு பின் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X