சென்னை, டிச. 15-
அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் தொழிற்சங்கத்தினருடன், தொழிலாளர் இணை கமிஷனர், இன்று சமரச பேச்சு நடத்த உள்ளார்.தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும், தொழிற்சங்க கூட்டமைப்பினர், போனஸ், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்காக, வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டனர்.இதையடுத்து, அதிகாரிகள் முன்னிலையில், தொழிற்சங்க நிர்வாகிகளுடன், இன்று காலை, 11:30 மணிக்கு, தொழிலாளர் தனி இணை ஆணையர், சமரச பேச்சு நடத்த உள்ளார்.சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள, தொழிலாளர் ஆணையரகத்தில் பேச்சு நடக்கிறது. வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிட்ட சங்கத்தினர் பங்கேற்கின்றனர். இதில், உடன்பாடு எட்டப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE